பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா ஆகியோரின் சொத்துகள் பற்றி அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும்படி அதிகாரிகளை முன்னாள் பிரதமர் மகாதிர் கேட்டுக்கொண்டார்.
அதற்கப்பால், நஜிப்பின் மகனும் மருமகனும் விசாரிக்கப்பட வேண்டும் என்றாரவர்.
“அவர்கள் அனைவரையும் தீடீர்ச்சோதனைக்கு உட்படுத்த வேண்டும்…இந்த உலகமே நஜிப்பைப் பற்றி சொல்கிறது, ஆனால் திடீர்ச்சோதனை இல்லை”, என்று இன்று பின்னேரத்தில் நாடாளுமன்றத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவரது மூன்று மகன்களின் நிறுவனங்கள் மீது ஐஆர்பி மேற்கொண்ட திடீர்ச்சோதனைகள் பற்றி அவரிடம் கேட்ட போது, ஐஆர்பியின் சோதனையை தாம் வரவேற்பதாகக் கூறிய மகாதிர், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம்கூட தமது மற்றும் தமது குடும்பத்தின் நிதிகள் பற்றி விசாரணை மேற்கொள்வதை தாம் வரவேற்பதாக கூறினார்.
மகாதிமிர் பிரதமராக இருந்த சமயத்தில், இப்படி எவராவது வாயை திறந்திருப்பாரேயானால், அவர்களை பிடித்து உள்ளே போட்டிருப்பார், இவர்.
நஜிப்பின் நாய்க்குட்டி, பூனைக்குட்டி களையும் மறந்து விடாதீர்கள்! அவைகளின் பேரிலும் ஏதாவது மறைந்திருக்கலாம்!
நஜிப், அவரது மனைவி ஓகே.
“மகன்” என்றால் நஜிப்பினுடைய மகனா ? ரேஷ்மாவின் மகனா ?