ஜொகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவுக்கு (பெர்சத்து) தாவப் போகிறார் என்று பெர்சத்து கூறிக்கொண்டது.
இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு அந்த அம்னோ சட்டமன்ற உறுப்பினருடன் சந்திப்பு நடத்தியதாக, தொடர்பு கொண்ட போது பத்து பகாட் பெர்சத்து தலைவர் முகமட் ஸைட் முகமட் யூசோப் கூறினார்.
அவர் பெர்சத்துவில் சேர்வதில் ஆர்வம் கொண்டுள்ளதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. அவருடைய இடத்தை எடுத்துக்கொள்வதற்காக சிலர் கொடுக்கும் அழுத்தத்தை அவர் எதிர்கொண்டுள்ளார் என்று முகமட் ஸைட் மலேசியாகினியிடம் கூறினார்.
கட்சி தாவும் சாத்தியம் குறித்து கடந்த வாரம் பத்து பகாட், புக்கிட் பெர்டானாவில் பேசப்பட்டதாக அவர் கூறினார்.
ஆனால், அந்த அம்னோ சட்டமன்ற உறுப்பினர் இதைச் செய்வாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மலேசியாகினி அவருடன் தொடர்பு கொண்டுள்ளது. அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை.
எதிரணிக் கூட்டணிக்கு இப்படி ஒரு முந்திரி கொட்டைத் தனம் ஏனேன்று புரியவில்லை. அவன் வரும்போது வரட்டும் என்று விட்டு விட வேண்டியது தானே..வரும் முன்னரே இதோ வர்றான்…அதோ வர்றான்.. இவந் வர்றான்…அவன் வர்றான் என்று முட்டை இட்ட கோழி மாதிரி கூப்பாடு போடுவது ஏன்? அவனை வராமல் தடுக்கவா? அல்லது ஆளும் கட்சியை உஷார் படுத்தவா?
முன்பு இப்படித்தான் ஒரு முந்திரிகொட்டை 2009- செப்டம்பர் 16-இல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அரை வேக்காட்டுத்தனமாக கொக்கரித்தது…ஆளும் கட்சி உஷாராகிவிட்டது. தேவையா இந்த கோமாளித்தனம்?