தேசியப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளிகளும் இன, மதப் பேதமின்றி அனைத்து மாணவர்களுக்குமானது எனத் துணைக் கல்வி அமைச்சர் செனட்டர் சோங் சின் வூன் கூறினார்.
உலு லங்காட்டில் உள்ள ஒரு தேசியப் பள்ளியில், ‘இஸ்லாம் மாணவர்’ மற்றும் ‘இஸ்லாம் அல்லாத மாணவர்’ எனக் குடிநீர் குவளைகளில் எழுதி வைக்கப்பட்டது தொடர்பாக அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
இச்சம்பவம் குறித்து, மாநிலக் கல்வி இலாகாவின் விளக்கத்திற்காகக் கல்வி அமைச்சு காத்திருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தாமான் புத்ரி தேசியப் பள்ளியில் ‘இஸ்லாம் மாணவர்’ மற்றும் ‘இஸ்லாம் அல்லாத மாணவர்’ எனக் குடிநீர் குவளைகளில் எழுதி, பிரித்து வைத்திருப்பது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை எப்.எம்.தி. இணையப் பத்திரிக்கை உறுதிபடுத்தியிருந்தது. ஆனால், இது குறித்து விளக்கம் பெற, பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டது, தோல்வியில் முடிந்தது எனவும் எப்.எம்.தி. தெரிவித்தது.
இச்சம்பவம் பலரின் கண்டனத்திற்குள்ளானது. ‘ஜி25’ அமைப்பின் உறுப்பினர் ஜோஹான் அரிப்பின் நாட்டில் ‘இஸ்லாமியம்’ செல்லும் பாதை தமக்கு வருத்தமளிப்பதாக உள்ளது எனக் கூறினார். ‘ஹலால்’ என்பதில் முக்கியமாகக் கருதப்படுவது சுத்தமே தவிர, அப்பொருளைப் பயன்படுத்தியது இஸ்லாமியரா? இஸ்லாம் அல்லாதவரா? என்பதில் அல்ல என்று அவர் கூறினார்.
“குவளையைச் சுத்தமாகக் கழுவினாலே போதும். அதனைப் பயன்படுத்தியது இஸ்லாமியரா? இஸ்லாம் அல்லாதவரா? என்பது முக்கியமல்ல. மதவாரியாகக் குவளைகளைப் பிரித்து வைப்பது ‘முட்டாள்’ தனம்,’ என அச்செயலை அவர் கண்டித்தார்.
அமானா கட்சியின் துணைத் தலைவர் முஜாஹிட் யூசோப் ராவா இச்சம்பவத்தை ‘துரதிஸ்டமான’ ஒன்று என வர்ணித்துள்ளார்.
“அந்த குடிநீர் டிஸ்பென்சர், அனைத்து மதங்களுக்கும் பகிர்ந்துகொள்ளும் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. மற்றவரோடு ஒன்றைப் பகிர்ந்துகொள்வது தவறான ஒன்றல்ல,” என்று கருத்துரைத்தார்.
“இது ஒரு ‘கடுமையான செயல்’, இத்தகைய செயல்கள் மற்றப் பிரச்சனைகள் உருவாகவும் வழிவகுக்கும். இஸ்லாம் இதையெல்லாம் கேட்டதில்லை,” என முஜாஹிட் மேலும் கூறினார்.
இதற்கிடையில், ம.சீ.ச. மத நல்லிணக்கப் பிரிவு தலைவர், தி லியன் கெர், அப்பள்ளியின் செயல் மாணவர்கள் மத்தியில் பாரபட்சத்தை ஊக்குவிப்பதாக உள்ளது என விமர்சித்தார்.
“மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் 1 மலேசியா கொள்கையை ஊக்குவிக்கும் வகையில், வேற்றுமையில் ஒற்றுமையை வளர்க்கும் எடுத்துக்காட்டாக, அப்பள்ளியின் தலைமையாசிரியர் இருக்க வேண்டுமே ஒழிய; இளையத் தலைமுறையினர் மத்தியில் இன, மதவெறியை ஊட்டக்கூடாது,” எனக் கூறினார்.
நம் நாட்டில் மதவாதம் தீவிரமடைந்து வருவதை இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.
இது முற்றிலும் தலைமை ஆசிரியரின் பொறுப்பு. தலைமை ஆசிரியரின் பின்னணி ஆராயப்பட வேண்டும்.தீவிரவாத அமைப்பில் தொடர்பு உள்ளவராக இருக்கலாம். இது புக்கிட் அமான் செய்ய வேண்டிய வேலை.
ஓபன் ஹவுஸ் விருந்த்து எப்படி நடத்துவது
தலைமை ஆசிரியர் செய்தது தப்பில்லை.ஏன் தெரியுமா?இஸ்லாமிய மாணவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள்.அவர்கள் பயன்படுத்திய குவளையை மற்ற மாணவர்கள் பயன் படுத்துவது பாவமில்லையா?
தாழ்வுமனப்பான்மைக் கொண்டவர்களே தங்களின் குறைகளை மறைக்க, இவ்வாறெல்லாம் சில்லறைத்தனமாக நடந்துகொள்வார்கள். மற்றவரின் கவனத்தை ஈர்க்கவே இவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்வதாக மனோதத்துவம் கூறுகிறது. அனுதாபத்துக்குரியவர்கள் !
ஆம் நாங்கள் மாட்றிச்சை பயன்படுத்துவோம் நீங்கள் மாட்டு முத்திரம் பயன்படுத்துவிர் இதில் தவறு இல்லை.
மாமிசம் சாப்பிடுவதால்:
1. மற்ற உயிர்களும் தம் உயிரைப் போன்றதே என்ற அன்பு குறைந்து விளங்குதற்கு காரணமாக உள்ளது.
2. மனதைக் கட்டுப் படுத்த இயலாது இருசிக்கு நாவும், சொல்லைக் கட்டுப் படுத்த இயலாத நாவும் இருந்தென்ன செத்தென்ன?
மாட்டிறைச்சி வியாதியை உண்டாக்கும்! மாட்டு மூத்திரம் வியாதியைக் குணப்படுத்தும்! சொல்லக் கேள்வி! அனுபவம் இல்லை!
angamuthu Vethachalam நீங்கள் கூறுவதும் ஏற்றுக்கொள்ள கூடியதே.
ஏனென்றால் இஸ்லாம் அல்லாதவர்கள் பன்றி இறைச்சியை சுவைப்பதினால் அவர்கள் பயன்படுத்திய குவளையை இஸ்லாமிய மாணவர்கள் பயன் படுத்தும் சாத்தியம் இருக்கிறதல்லவா ?
அது சரி பன்றி இறைச்சி வியாபாரிகள் செலுத்தும் வரி பணத்தில் பன்றியின் சிதறல்கள் ஒட்டி கொண்டிருக்குமே, அதை மட்டும் அரசாங்கம் ஹலால் என்று வாங்கி கொள்கிறதே.
அப்பணம் இஸ்லாமியர்கள்-இஸ்லாம் அல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி தங்களது பாக்கெட்டில் அடைக்கலம் அடையும்போது, இஸ்லாமியர்கள்-இஸ்லாம் அல்லாதவர்கள் முகத்தில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். எனவே இந்த பாகுபாடு தேவைதானா ?
சிறுவயதிலிருந்து பன்றிகறிதிண்ணவர்
மதம்மாறி இசுலாமியப்பண்ணை
திருமணம் செய்யலாமா,!
அலை ஓசை அவர்களே -அது முடியும் காரணம் மதம் மாறியதும் அந்த மானிடனே புதிய மனிதனாகிறான் போலும். பகுத்தறிவுக்கும் மதங்களுக்கும் இடை வெளி மிக அதிகம். அதிலும் இந்த மதத்தின் பெரும்பாலோர்க்கு எதை வைத்தாலும் எட்டாது.