பாக் லா: ஃபோரெக்ஸ் மீது ஆர்சிஐ அமைக்கப்பட்டது ஏன் என்று எனக்குத் தெரியும்

badawiமுன்னாள்  பிரதமர்  அப்துல்லா   அஹமட்   படாவியிடம்    பேங்க்   நெகராவின்   அந்நிய   செலாவணி  இழப்புகளை  விசாரிப்பதற்கு   அரச  விசாரணை   ஆணையம்    அமைக்கப்பட்டிருப்பது   குறித்து   வினவியதற்குப்   பதில்   கிடைத்தது.   ஆனால்   அது  பூடகமான  பதிலாக   இருந்தது.

அது  குறித்து   அவர்   விவரிக்க   மறுத்து  விட்டார்.  அவ்விவகாரம்  தொடர்பில்   மேலும்   கேள்விகள்   கேட்கப்படுவதையும்   அவர்   விரும்பவில்லை.

டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  எதிராக    அரசியல்    ஆதாயம்     தேடுவதற்குத்தான்   ஆர்சிஐ   அமைக்கப்பட்டதா   என்று  கேட்டதற்கு,  “அது  பற்றி   நான்  கருத்துச்   சொல்ல வேண்டிய      அவசியமில்லை.  தேவையில்லை”  என்றார்.

ஆணையம்   அமைக்கப்பட்டதன்  நோக்கம்    தெரியுமா   என்றதற்கு,  “தெரியும்,  தெரியும்”,  என்றார்.

மேன்மேலும்    வலியுறுத்திக்   கேட்டதற்கு  “நான்  (ஓய்வு   பெற்று)   நீண்ட  நாளாயிற்று…… (நான்)  எதைப்  பற்றியும்   எதுவும்   சொல்ல   வேண்டியதில்லை”,  என்று   படாவி   கூறினார்.

2003-இல்,  மகாதிருக்குப்  பின்  பிரதமரானவர்   அப்துல்லா  படாவி.  மகாதிரே   அவரைப்  பிரதமராக்கினார்.  ஆனால்,  அதே  மகாதிர்தான்   2009-இல்    அவர்  பதவி  விலகுவதற்கும்  முக்கிய   காரணமாக   இருந்தார்.