புதன்கிழமை மக்களவையில், சட்டப் பிரிவு 88ஏ மீட்டுக்கொள்ளப்பட்ட நிலையில் சட்டச் சீர்திருத்த(திருமணம் மற்றும் மணவிலக்கு)ச் சட்ட (எல்ஆர்ஏ)த் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) கூறியது.
“திருத்தப்பட்ட சட்டத்தில் மணவிலக்கு, மணம்புரிந்துகொண்டவர்களின் சொத்துகளைப் பங்கிட்டுக்கொள்ளல் போன்ற விவகாரங்களில் சில முன்னேற்றங்கள் காணப்படுவது உண்மைதான்.
“ஆனால், பலரது வாழ்க்கையையும் பல பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடிய மைய விவகாரமான ஒருதலைப்பட்சமாக குழந்தைகளை மதமாற்றும் விவகாரம், அதற்கு தீர்வுகாணப்போவதாக அரசாங்கம் அறிகுறிகள் காட்டியது என்றாலும் எந்தத் தீர்வும் காணப்படாமல் அப்படியேதான் இருக்கிறது”, என சுஹாகாம் தலைவர் ரசாலி இஸ்மாயில் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
சட்டத் திருத்தத்திலிருந்து நீக்கப்பட்ட பிரிவு 88ஏ, குழந்தைகள் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்படுவதைத் தடுப்பதற்குப் மிகவும் பயன்பட்டிருக்கும் என ரசாலி கூறினார்.
ஏமாற்றமளிக்கிறது என்று சொல்லி ஆறுதல் அடைவதில் அர்த்தம் ஏதும் இல்லை ! இது ஒரு வகையில் மக்களை ஏமாற்றும் தந்திரமே !! அடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெளிவாக சொல்.
சட்டதைப்பற்றி அறியாதவர் சட்ட அமைச்சர்களாக இருப்பது பெரும் வேதனையாக உள்ளது. அணைத்து பங்களி காட்சிகளிலும் , உறுப்பினர்களிலும் கலந்து பேசாமல் , எப்படி தன்முனைப்பாக பழைய நிலுவை சட்டத்தை புறந்தள்ளி புதிய சட்டத்தை செயல்படுத்த mudiyum ? இதனை எவ்வாறு பங்களி கட்சியில் அங்கம் வகிக்கும் மூன்றவது பெரிய கட்சியென கையில் ஒலிபெருக்கியை எடுக்கும்போதெல்லாம் மார்தட்டிக்கொள்ளும் ம இ கா சம்மதம் பெறப்பட்டதா? பாராசூட் மணியம் இதனை அறிந்தாரா? தனக்கு பதவி இருந்தால் போதும் என்ற நோக்கத்தில் மௌனம் காத்து சம்மதம் தெரிவித்தாரா ? வரும் தேர்தலில் ம இ கா என்ற கட்சிக்கு நாமமே மிஞ்சும் … இது உறுதி .
ம.இ.கா. தலைவர்கள் பெரும்பாலும் ஒரு பெண்டாடிட்டிக்கு மேலே உள்ளவர்கள்! அவர்கள் சட்டத்தை ஆதரிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது!