பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அவர் அலுவலகம் வெளியிட்டதாகக் கூறப்படும் கடிதங்களுக்காக கைது செய்தது.
அக்கடிதங்கள் செபெராங் பிறையிலுள்ள ஒரு சட்டவிரோதமான தொழிற்சாலை சம்பந்தப்பட்டதாக நம்பப்படுகிறது. நேற்று, எம்எசிசி அத்தொழிற்சாலையில் திடீர்ச்சோதனை நடத்தியது.
பிற்பகல் மணி 3.30 அளவில், பீ கைது செய்யப்படுகிறார் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
நாளை, காலையில் அவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என்று அவரது வழக்குரைஞர் ஆர் எஸ் என் ராயர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பீ அவரது வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். அவர் ஏன் அந்த ஆணையத்தால் கைது செய்யப்பட வேண்டும்? அவர் தடுத்து வைக்கப்படுவதற்கான தேவை ஏதும் இல்லை என்று ராயர் மேலும் கூறினார்.
ஏன் பீ கைது செய்யப்பட்டார் என்ற கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல், எங்களுடைய அறிக்கைக்காக காத்திருங்கள் என்று ஒரு எம்எசிசி அதிகாரி கூறினார்.
சுங்கை புயு சட்டமன்ற உறுப்பினரான பீயும் கருத்துரைக்க மறுத்து விட்டார்.
அம்னோ அடிவருடி இலாகா MACC – நம்பிக்கை நாயகனின் தேர்தலுக்கு எதிர் கட்சி பிரமுகர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்து விட்டது. இன்னும் எத்தனை பேர்கள்?