பினாங்கு, கம்போங் சுங்கை லெம்புவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஒரு தொழிற்சாலையின் மேலாளரும் அவரின் மகனான நிர்வாகியும், இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.எ.சி.சி.) கைது செய்யப்பட்டனர்.
அத்தொழிற்சாலை குறித்த விசாரணைக்காக, பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பீ ஓன் போ கைதான சில மணி நேரங்களில், இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அந்த 70 வயது மேலாளரும் அவரின் 37 வயது மகனும், இன்று மாலை 6.45 மணியளவில், ஜாலான் சுல்தான் அஹ்மாட் ஷாவில் உள்ள எம்.எ.சி.சி. தலைமையகத்திற்கு, வாக்குமூலம் பதிவுசெய்ய சென்றபோது, தடுத்து வைக்கப்பட்டதாக ‘ஸ்டார்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டது.
அவர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை உறுதிபடுத்திய எம்.எ.சி.சி., நாளை காலை அவர்கள் ஜோர்ஜ் டவுன் மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு, பிணை எடுக்க கொண்டுவரப்படுவர் எனவும் ஓர் அறிக்கை வாயிலாகக் கூறியது.
கடந்த 10 ஆண்டுகளாக, உரிமம் ஏதுமின்றி, விவசாய நிலத்தில் அந்தக் கார்பன் வடிக்கட்டி தொழிற்சாலை சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக அவ்வறிக்கை மேலும் கூறியது.
நேற்று, சுற்றுச்சூழல் துறை மற்றும் குடிநுழைவுத் துறையோடு அத்தொழிற்சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
செப்ராங் பிறை மாநகராட்சி மன்ற அலுவலகத்திலும், நேற்று எம்.எ.சி.சி. சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பரவாயில்லையே, எம்.ஏ.சி.சி வேகமாக வேலை செய்யுதே! இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்!!! ஒரு சட்ட விரோத தொழிற்சாலைக்கு ஒரு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைது. அதே போல் எல்லா இடங்களிலும் நடக்கனுமே? பஹாங் கேமரன் மலையை அன்னிய தொழிலாளர்களைக் கொண்டு அழித்து, விவசாயம் என்ற பெயரில் சுற்றுப்புற பாதிப்பையும் திடீர் வெள்ளத்தையும் , மண் சரிவையும் ஏற்படுத்த காரணமான மாநில பொறுப்பாளர்கள் யார் அவர்களையும் தண்டிங்க,பல லட்சம் பயனீட்டாளர்களின் நீர் விநியோக தடைக்கு காரணமான சிலாங்கூரில் சிமேஞ்சிக் நீர் தேக்கத்தில் டீசல் கழிவு கலக்க காரணமான நிறுவனம், அதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள், மாநில எஸ்கோவை கைது செய்யுங்க. கெட்கோ நில விவசாயிகள் உரிமை கொண்டாடும் நிலத்தை ரிசிவர் ஏலமிட அனுமதி அளித்த மாநில மந்திரி புசார், தோட்டங்களுக்கு பொறுப்பான ஆட்சிக் குழு உறுப்பினரை ஜெயிலில் போடுங்க வரவேற்கிறோம்……. முடியுமா ? இன்னும் தரோம்…..
இது உண்மையா? இன்னும் எவ்வளவு ஜோடிச்ச விசாரணைகளோ?