ஆவி வாக்காளர்களைக் ‘கண்டறியும்’ செயலி அறிமுகம்

appபிகேஆர்,  Spera  என்னும்  ஆண்ட்ராய்ட்   செயலியை   அறிமுகப்படுத்தியுள்ளது.  அதைக்  கொண்டு     வாக்களிப்பு    வட்டாரங்களில்     ஆவி   வாக்காளர்கள்  இருப்பதைக்  கண்டறிய  முடியுமாம்.

ஆவி  வாக்காளர்கள்   இருப்பதாக   ஐயம்  கொள்ளும்   வாக்காளர்கள்    அந்தச்  செயலியை   வைத்து   வாக்காளர்   பட்டியலில்   உள்ள   விவரங்களுடன்  சரிபார்க்கலாம்  என்று   பிகேஆர்   தேர்தல்   இயக்குனர்   நுருல்   இஸ்ஸா    அன்வார்   கூறினார்.

Spera-வில்  உள்ள  தரவுகளை  வைத்து    ஆவி  வாக்காளர்கள்,    திரும்பத்  திரும்ப  வாக்களிப்போர்,   இறந்துவிட்ட    வாக்காளர்கள்   ஆகியோரைக்   கண்டறிய   முடியும்.

நேற்று  இச்செயலி    அறிமுகப்படுத்தப்பட்டது.  இதை   Google Play store   தளத்திலிருந்து     இலவசமாக    தரவிறக்கிக்கொள்ளலாம்.

தேர்தல்   ஆணையம்   தேர்தல்   விசயத்தில்   பல   ஏமாற்று   வேலைகளில்    ஈடுபட்டு   வருவதாகக்  குற்றஞ்சாட்டிய    பிகேஆர்   உதவித்    தலைவர்,  அதன்   தில்லுமுள்ளுகளை   முறியடிக்கவே    இச்செயலி      கொண்டுவரப்பட்டதாக   ஓர்   அறிக்கையில்     கூறினார்.

வரப்போகும்   பொதுத்    தேர்தல்   இதற்குமுன்  இல்லாத   அளவுக்குத்   “தில்லுமுள்ளுகள்”  நிறைந்த    தேர்தலாக    இருக்கும்   என்றவர்   ஆருடம்   கூறினார்.

“Spera  மலேசியர்    அனைவருக்கும்    இசிக்கும்   பிஎன் -அம்னோ   ஆட்சிக்கும்   எதிரான   ‘போரில்’  பங்குபெற  ஒரு  வாய்ப்பை    அளிக்கிறது”,  என்றும்  நுருல்   கூறினார்.