ஜோகூர் இளவரசி துங்கு அமினா மைமுனா இஸ்கண்டரியா சுல்தான் இப்ராகிம், ஒரு புதிய வீட்டில் புதிய வாழ்க்கையைத் தொடங்கப் போகிறார்.
நாளை அவர் டச்சுக்காரரான டென்னிஸ் முகம்மட் அப்துல்லாவைக் கரம் பிடிக்கிறார்.
“நாங்களிருவரும் எங்கள் சொந்த வீட்டில் கணவன் மனைவியாக புது வாழ்க்கை தொடங்கப் போகிறோம்.
“நான் பெற்றோரையும் குடும்பத்தாரையும் விட்டு விலகி தனியே இருக்கப்போவது இதுவே முதல்முறையாகும்”, என்று இளவரசியார் கூறினார்.
நாளை, ஜோகூர் பாரு, புக்கிட் செரேனில் நிச்சயதார்த்தம் நடக்கும். அதன் பின்னர் திருமணம்.
மாலையில் பெர்சண்டிங். மணமக்கள் ஜோகூர் பாரு இஸ்தானா புசார் அரியணை மண்டபத்தில் அமர்ந்து காட்சியளிப்பர்.
அனைத்துச் சடங்குகளும் ஜோகூர் அரச மரபுப்படியும் பாரம்பரிய வழக்கப்படியும் நடைபெறும்.


























நல்வாழ்த்துக்கள்
ஹாலந்தில் எப்போது …… திருமணம்?