இன்று ஷா ஆலாம், இளைஞர் & கலாச்சார காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள, ராஜா மூடா மூசா மண்டபத்தில், டாக்டர் மகாதீர் கலந்துகொண்ட ‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்ச்சி வன்முறையில் முடிந்தது.
பங்கேற்பாளரின் மெமாலி தொடர்பான கேள்விக்கு, டாக்டர் மகாதீர் பதிலளித்த போது அவரை நோக்கி காலணிகள் வீசி எறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் கலவரம் வெடித்தது.
இருப்பினும், பாதுகாப்பு அதிகாரிகள் அந்த முன்னாள் பிரதமரை பத்திரமாக மண்டபத்திலிருந்து வெளியேற்றினர்.
மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் நாற்காலிகளைத் தூக்கி வீசத் தொடங்கியதால், நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. மேலும், அடையாளம் தெரியாதவர்களால் அம்மண்டபத்தில் தீச்சுடர்கள் விடுவிக்கப்பட்டதோடு பெர்சத்து ஆதரவாளர்களுக்கும் பிரச்சனைக்குக் காரணமான நபருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டதால், நிலைமை இன்னும் மோசமானது.
பெர்சத்து ஆதரவாளர்கள், ‘பெர்சத்து’ சட்டையை அணிந்திருந்த இரண்டு சந்தேக நபர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
“நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென, முன்னதாக நாங்கள் ஏற்பாட்டாளர்களிடம் கூறியிருந்தோம். ஆனால், இன்று என்ன நடந்தது என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஏற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைக்கவுள்ளோம்”, என போலிஸ் அதிகாரி ஷாஃபியான் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக வெளியாட்கள் யாரும் புகார் செய்யாவிட்டாலும், காவல்துறை ஏற்பாட்டாளர்களை விசாரணைக்குட்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பெர்சத்து இளைஞர் தலைவர் (ஆர்மாடா) ஷேட் சட்டிக் ஷேட் அப்துல் ரஹ்மான் இச்சம்பவம் குறித்து தங்கள் கட்சி போலிஸ் புகார் ஒன்றை இன்றிரவு செய்யும் என்று கூறினார்.
நாட்டின் மூன்றாவது பிரதமர் துன் உசேன் ஒன்னின் பதவி
விலகளுக்குப்பிறகு மகாதீர் பிரதமராக, முழு ஒத்துழைப்பு
தந்தவர்தான் இந்த மூசா ஈத்தாம் ! அப்படி உதவி செய்த ஒரு
நல்ல மனிதரை கம்பொங் மெமாலி ரத்தக்களரியான சம்பவத்தில்
( KAMPUNG MEMALI TRAGEDI ) இவரை மகாதீர் எப்படி மாட்டி விட்டு
நரித்தந்திரமாக தப்பித்துக்கொண்டார் என்று பார்ப்போம் . கெடா
மாநலத்தில் உள்ள கம்பொங் மெமாலி கிராமத்தில்
இப்ராஹிம் லிபியா என்ற பெயரில் தீவிரவாத மதப்போதகர்
ஒருவர் அந்தக்கிராமத்திலுள்ள மக்களை தவறான
மதபோதனையில் வழிநடத்துவதாக போலீஸ் தலைமயகத்திற்கு
தகவல் கிடைத்ததால், அவர்களும் ஒரு வருட காலமாக அந்த
மதபோதகரையும்,கிராமத்து மக்களையும் ரகசியமாக,
கண்கானித்தார்கள். அவர்களின் நடவடிக்கைகள் அரசாங்கத்துக்கு
மருட்டளாக இருந்ததால், போலிஸ் அதிகாரிகள் மதபோதகரை
விசாரிக்க முடிவெடுத்தார்கள். பலதடவைகள் அவரை விசாரிக்க
சென்றும், அந்த கிராமத்து மக்கள் கேடயமாக நின்று போலிஸ்
வருகையை தடுத்தார்கள். பல சந்தர்ப்பங்களில் அவர்கள்
போலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஆயுதமேந்தி வன்முறை
களிலும் இறங்கினார்கள். வேறு வழியின்றி 19 ஆம்தேதி நவம்பர்
1985தில், காவல் துறையினர் அதிரடியில் இறங்கியதால்,
போலீஸ்காரர்கள் உற்பட 18 பேர் உயிரிழந்தார்கள் .
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பாஸ் ( PAS ) கட்சியை
சேர்ந்தவர்களாக இருந்ததாலும், இறந்தவர்கள் யாவரும் மலாய்
காரர்கள் என்பதாலும் சம்பவத்தை “ ஈரை பேனாக்கி பேனை
பெருமாளாக்கிவிட்டார்கள் “ பாஸ் கட்சியினர். மகாதிர்
பதறிப்போனார், இதனால் மலாய்க்காரர்களின் ஆதரவு குறைந்து
தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் தடங்கல்கள் எற்படுமோ
என்று பயந்துவிட்டார் . சம்பவம் நடந்த மறுநாள் மகாதீருக்கு
சாதகமாக ஒரு மலாய் நாளிதழில் “ மகாதீர் சீன தேசம் சென்று
விட்டார் “ என்று தலையங்கமாக பிரசுரித்திருந்தது. ஆனால்
மெமாலி சம்பவத்தன்று அவர் உள்நாட்டில்தான் இருந்தார் என்பதே
உன்மை ! இப்படி ஒரு பொய்யான பத்திரிக்கை தகவலால்,
மகாதீர் மிக சாமார்த்தியமாக மலாய்சமூகத்தின் ஆத்திரத்தை
துன் மூசா ஈத்தாம் மீது தந்திரமாக திருப்பிவிட்டார் ! அன்றைய
காலக்கட்டத்தில் துணை பிரதம மந்திரியாக பொறுப்பு வகித்த
மூசா ஈத்தாமின் அரசியல் வாழ்க்கை மகாதீரின் சூழ்ச்சியால்
மலாய்க்காரர்களின் செல்வாக்கை இழந்து, கொஞ்சம் கொஞ்சமாக
சூனியமாகி FEB- 28ஆம்தேதி 1986 ரில் அவரை பதவி துறக்க
செய்தது . மகாதீரின் மாய வலையில் சிக்கிய மலாய் சமூகம்
ஒரு நல்ல நேர்மையான அரசியல்வாதியை இழந்தது . இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் இந்த தமிழ் சமுதாயத்துக்கு மகாதீர் செய்த துரோகம் என்னவென்றே தெரியாத சூழ்நிலையில் இந்தக்கதை எங்கே தெரிந்திருக்க போகிறது என்ற எண்ணத்தில்தான் தெரியப்படுத்துகிறேன்.குறிப்பு: இந்த MEMALI ரத்தக்களரி சம்பவம் TUN MUSA HITAM அவர்களின் FRANKLY SPEAKING புத்தகத்திலிருந்து அவரது அனுமதியோடு எழுதியது !
TAPAH BALAJI, இது ஓர் அருமையான நினைவு கூறல், நன்றி வாழ்த்துக்கள்.
TN50-க்குள் காலனிக்கு பதிலாக வெடிகுண்டு வீசும் கலாச்சாரம் தோன்றிவிடும்.
இன கலவரத்தின் தந்தை ரசாக், வெடிகுண்டு வீசும் கலாச்சாரத்தின் தந்தை ரசாக்கின் தனயன் நஜிப் PB என்பது மலேசிய வரலாற்றில் இடம்பெறும் என்று நிச்சயமாக நம்பலாம்.
இப்போது இதை எழுதுபவர் அன்றே சொல்லியுருக்கலாமே? கண் கேட்ட பிறகு சூரிய சமஸ்காரம் ..
அடடா! காவல்துறைக்குத் தெரியாமலா இதெல்லாம் நடக்கிறது! ஒரு நிகழ்ச்சிக்கே வன்முறை என்றால் இவர்களா நாட்டை எதிர்கட்சியினரிடம் ஒப்படைப்பார்கள்? ஆட்சி மாற்றம் வராது! மே 69 க்கு அவர்கள் தயார்!
அன்று பல ரூபங்களில் நமக்கு ஒரு சில தொல்லைகள் கொடுக்கப்பட்டன. ஒரு மகா மா மேதை நமக்கு தலைவராக இருந்த சமயம் பல பல தில்லு முல்லுகள் செய்த பொது இந்த மகா தலைவர் வாய் முடி இருந்தார். உங்கள் பிரச்னை என்று கூறினார். டெலிகாம் பங்குகள், இன்னும் எத்தனையோ பங்குகள் நமக்கு அரசாங்கம் கொடுத்த போது இந்த தலைவர் நமக்காக ஏதாவது பேசியிருந்தால் நமது இந்திய சமுதாயம் ஒரு விழுக்காடு விட பல விழுக்காடு முன்னேறி இருக்கும். ஒரு சாபக்கேடு இந்த தலைவன் நமக்கு கிடைத்தது. இன்று அவர் சமுதாயமே செருப்படி கொடுக்கிறது. சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை சமுதாயமே.
மகாதீர் ஒரு நேர்மையானவர் அல்ல என்பதற்கு தாப்பா பாலி எழுதிய குறிப்பு ஒரு சான்று. மகாதீர் காலத்தில் அவர் செய்த அடக்கு முறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. நீதித் துறைய முடக்கியவர் . பி டி என் வழி இனவாதக் கொள்கைகளை பரப்பியவர். மலாய்க்காரர் அல்லாதவரை அரசு துறைகளில் படிப்படியாக குறைத்தவர் .இந்தியர்கள் மருத்துவ துறைகளில் அதிகம் பேர் இருக்கின்றார்கள் என பொறாமைப் பட்டவர். அதன் விளைவாக ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அதிக இந்திய மாணவர்க்கள் பயில்வதைகண்டு அந்த பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையே ரத்து செய்தவர். பதவியில் இருக்கும் வரையில் தான் இந்திய வம்சாவளியினரச் சேர்தவர் என்பதை ஏற்றுகொள்ள மறுத்தவர்..
நாடு இந்த நிலைக்கு மோசமாக போனதற்கு முதற்காரணமே மகாதீர்தான். நாடு அவர் காலத்தில் வ்ளர்ச்சி அடைந்தது என்பது உண்மைதான். ஆனால் அது வெறும் வெளிப்புற வளர்ச்சி மட்டுமே. மனித நேயம் மறந்தது. இன வாதம் பெருத்து ஒற்றுமை வீழ்ச்சி கண்டது. இஸ்லாமிய மதவாதம் மேலோங்கி மதங்களுக்கிடையிலான இணக்கம் வீழ்ச்சி கண்டத்து. .
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதுவும் சிலப்பதிகாரம் நமக்கு ௨௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தெய்வ வாக்குகளாகும். இதிலிருந்த்து மகாதீரும் தப்பிக்க முடியாது , அவரப்போன்று அரசியலில் தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது.
வயதான காலத்தில் செருப்படி வாங்கவேண்டும் என்ற தலையெழுத்து ! சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு சந்தோசமாக காலம் தள்ளுவதை விட்டு விட்டு எதற்கு இந்த வீண் வேலை ! பதவி ஆசையும் ! பணத்தாசையும் இன்னும் விட்டு போகவில்லையா !!
செருப்பு விவகாரம் யாருடைய கைங்கரியம்?
வயதானவர்கள் என்பதாலேயே சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு சந்தோஷமாக காலம் தள்ள முடியாது, நண்பரே! காலங்காலமாக பொதுப்பணியில் இருந்தவர்கள் சும்மா இருக்க முடியாது என்பது தான் உண்மை. அதற்கு சரியான உதாரணம் பெரியார், ராஜாஜி. நோய் நொடி இல்லை என்றால் கருணாநிதி இன்னும் ஆட்டம் காட்டிக் கொண்டுதான் இருப்பார்!
தன் சொந்த இனத்திலிருந்து மகாதிர் கற்றுக்கொள்ள வேண்டியது இது போல இன்னும் நிறைய உண்டு. தன் எஞ்சிய காலத்தில் அவர் அவற்றையும் கற்றுக்கொள்வார். கடந்தகால துரோகங்களுக்காக இந்திய இனத்திடம் மன்னிப்புக் கோருவார். காலம் அதற்கு வகை செய்யும்.
ஆனாலும் ஒரு தலைவன் என்பவன் சிலரின் போற்றுதலுக்கும் பலரின் தூற்றுதலுக்கும் ஆளாவதிலிருந்து விடுபட முடியாது என்ற போதிலும் அவரை நோக்கி மட்டு மரியாதை இன்றி காலணி வீசுவதும் , நாற்காலிகள் பறப்பதும் எந்த வகையில் நியாயம். தற்போதுள்ள தலைவர்களின் நிகழ்ச்சியில் இப்படியோர் அசம்பாவிதம் நடந்திருந்தால் இப்படித்தான் நின்று நிதானமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?
s.maniam மட்டுமல்ல அனைத்து மகாதீர் ஏதிர்ப்பாளர்களும் இன்னும் எத்தனை வருடத்திற்கு மகாதீரை இந்திய சமுதாயத்திற்கு துரோகம் விளைவித்தவர் என்று கூறி கொண்டிருக்க போகிறீர்கள்.
இதனால் மகாதீர் அவர் ஆட்சி காலத்தில் இந்திய சமுதாயத்திற்கு இழைத்த துரோகத்தை நியாயப்படுத்தவில்லை.
எட்டப்பன் பரம்பரை ஈனர்களான மஇகா-வின் ஆசியோடுதான் மகாதீர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய சமுதாயத்திற்கு துரோகம் விளைவித்து இருக்க முடியும்.
கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த வேலையே ஒழுங்காக செய்யாததால் மஇகா-வின் துணை அமைச்சரை அறைந்து தன் காரியத்தை சாதித்து கொண்ட மலாய்க்காரனைப்போல், நமது சமுதாயமும் அன்றே மஇகாகாரனை அறைந்து வேலை வாங்கி இருந்தால், மகாதீரினால் இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்ட துரோகத்தை முழுமையாக தடுத்து இருக்க முடியாவிட்டாலும் சிறிதளவாவது தடுத்து இருக்கலாம்.
என்ன செய்வது நம் சமுதாயம் எட்டப்பன் பரம்பரையோடு பிரிக்க முடியாத தொப்புள்கொடி உறவல்லவா.
கடந்த காலத்தில் நடந்ததை பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை.
நாம் தற்போலுள்ள அரசியல் சூழ்நிலைக்கு வருவோம்..
தற்போலுள்ள அரசியல் சூழ்நிலையில் எதிர்வரும் 14-வது பொது தேர்தலில் பரிசான தோல்வி அடைய வேண்டுமானால் மலாய்க்காரர்கள் குறிப்பாக அம்னோவின் மலாய்க்காரர்கள் ஒட்டு பிளவுபட வேண்டும்.
எதிர்க்கட்சி கூட்டணிக்கு, PKR தலைமை ஏற்றால் அது பல்லின கட்சி மலாய்க்காரகளின் நலனில் அக்கறை காட்டாது என்றும், DAP தலைமை ஏற்றால் அது சீனர்களை நலன்களுக்கு மட்டுமே பாடுபடும் மலாய்க்காரகளின் நலன்களை புறக்கணிக்கும் என்றும், பரிசான் மலாய்க்காரர்களிடையே பிரச்சாரம் செய்யும் கடந்த தேர்தலை போலவே.
இது எதிர்கட்சிக்கு வாக்களிக்க நினைக்கும் மலாய்க்காரர்களுக்கு எதிர்க்கட்சிகள் மீது அவநம்பிக்கை ஏற்படுத்தலாம்.
எதிர்க்கட்சி கூட்டணிக்கு, பிரிபூமி தலைமை ஏற்றால் பரிசான் மேற்கூறும் பிரச்சாரம் மலாய்க்காரர்களிடையே எடுபடுமா எனபது சந்தேகமே. ஏனென்றால் பிரிபூமி INTERMEDIATE தலைவராக இருக்கும் மகாதீர் முன்னாள் பிரதமர் மட்டுமல்ல இன்றைக்கு மலாய்க்காரர்கள் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணமே மகாதீர்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தற்போது அம்னோவின் ஒட்டு வங்கியான மலாய்க்கார்களின் ஓட்டை பிளவு படுத்தக்கூடிய ஒரே தலைவராக இருப்பவர் மகாதீர்தான் என்பதை மறுக்க முடியாது.
ஆகையால் எதிர்கட்சி கூட்டணியையும் அதற்கு தலைமையேற்கும் பிரிபூமியையும் ஆதரித்தால்லொழிய ஆட்சி மாற்றத்திக்கான அறிகுறி கானல் நீர்தான்.
வைத்தியர் தனது சொந்த கசப்பு மருந்தை உண்டு அனுபவிக்கின்றார்
மேமாலி சம்பவம் பற்றி மகாதீர் :
‘If you kill cops, be prepared for retaliation’ – Dr M on Memali
வாசகர் ஒருவரின் கருத்து :
Fair&Just
If there is dirty bloodshed, Tun M will be dead long ago,
Look at razak who died of dirty blood when there was blood on his hands.
Died not even full term pm.
God is Great.