அம்னோ உறுப்பினர்கள் “ஜாலியாக” இருந்தது போதும், இனி தீவிரமாக சிந்திக்க வேண்டும் என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் நஸ்ரி அசிஸ் வலியுறுத்தினார்.
பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் ஏற்கனவே செய்தவையே போதும் என்று இறுமாந்து இருந்துவிடக் கூடாது, அம்னோ மற்றும் பாரிசான் வெற்றிக்குக் கடுமையாக பாடுபட வேண்டும் என்றவர் கூறினார்.
அம்னோ நடைமுறைக்கு ஏற்ற முடிவையே செய்ய வேண்டும். வெற்றிபெறக் கூடிய வேட்பாளர்களாகப் பார்த்துத்தான் அது களமிறக்க வேண்டும் என்றாரவர்.
“அம்னோ, வேட்பாளர்களைக் களமிறக்குவதில் உறுதியாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு தொகுதியில் வாக்காளர்களில் 50 விழுக்காடு மலாய்க்காரர்கள் என்றால் அங்கு அம்னோ பிரதிநிதி ஒருவரைத்தான் களமிறக்க வேண்டும்.
“கடந்த பொதுத் தேர்தலில் பேராக்கில் நாம்(அம்னோ) இரண்டு இடங்களைத் திரும்ப எடுத்துக்கொண்டோம், பாசிர் பாஞ்சாங்கையும் பெஹ்ராங்கையும். இரண்டிலும் வென்றோம். 2008-இல் பங்காளிக் கட்சி ஒன்று அங்கு போட்டியிட்டுத் தோற்றது”, என நஸ்ரி நேற்று குவாந்தான் அம்னோ தொகுதி பேராளர் கூட்டத்தில் பேசியபோது குறிப்பிட்டார்.
பகல் கனவு காண்கிறார்
நஸ்ரி உனக்கும் சீட் இடம் கொடுத்தால் அதைவிட அம்னோவுக்கு இழிவு வேறு எதுவும் கிடையாது..