துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, நேற்று மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0 கருத்தரங்கில் நிகழ்ந்த வன்செயல்களுக்கு வருத்தம் தெரிவித்தார்.
“மறைப்பதற்கு ஏதுமில்லை கருத்தரங்கில் நிகழ்ந்ததை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் நடக்கக் கூடாது.
“போலீசார் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள், அதற்குக் காரணமானவர்கள் அக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெளியார் என்றாலும் விட மாட்டார்கள்.
“நாட்டில் ஜனநாயகம் முறையாக நிலைநிறுத்தப்பட வேண்டும். நமக்கிடையே கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தனிப்பட்டவர்களுக்கு எதிராக வன்செயல்கள் கூடாது”, என புத்ரா உலக வாணிக மையத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் துணைப் பிரதமர் கூறினார்.