குவான் எங், நோர்லேலா ஆகியோரிடம் எம்ஏசிசி வாக்குமூலம் பதிவு செய்யும்

maccமலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம் (எம்எசிசி),  புக்கிட்   மெர்தாஜாம்,  கம்போங்   சுங்கை   லெம்பு-வில்    செயல்பட்டுவரும்   சட்டவிரோதத்   தொழிற்சாலை   தொடர்பாக    முதலமைச்சர்    லிம்   குவான்   எங்கையும்    பெனாந்தி   சட்டமன்ற    உறுப்பினர்     டாக்டர்   நோர்லேலா   அரிப்பினையும்  விசாரணைக்கு   அழைக்கும்.

இதைத்   தெரிவித்த    எம்ஏசிசி   துணைத்   தலைமை   ஆணையர் (நடவடிக்கை)  அஸாம்   பாகி,    சரியான   நேரத்தில்   அவர்களிடம்   வாக்குமூலம்   பதிவு   செய்யப்படும்   என்றார்.

“அவ்விவகாரம்   பற்றி    அவர்கள்   பொதுவில்   பேசியிருப்பதால்   அவர்களை   விசாரணைக்கு    அழைக்கிறோம். இது   வழக்கமான    ஒன்றுதான்”,  என   அஸாம்  கூறியதாக   த   ஸ்டார்   இன்று    தெரிவித்தது.