சிலாங்கூர் பறிபோனதற்கு கீர் தோயோதான் காரணம்- தெங்கு அட்னான்

adnanசிலாங்கூர்   பிஎன்,   பொதுத்   தேர்தலில்   வெற்றிபெற   நினைத்தால்   அதன்  பலவீனங்களையும்   கடந்த   பொதுத்   தேர்தலில்   மாநிலத்தைக்  கைப்பற்ற  முடியாமல்   போனதற்கான   காரணங்களையும்    கண்டறிய    வேண்டும்  என   அம்னோ    தலைமைச்   செயலாளர்    தெங்கு   அட்னான்   துங்கு   மன்சூர்   கூறினார்.

பிஎன்  12வது   தேர்தலில்   சிலாங்கூரில்   தோற்றுப்போனது.  அதற்கு   மந்திரி   புசார்   கீர்   தோயோ    காரணம்.   அவர்   ஒரு   ஆலயத்தை   உடைக்கச்   சொன்னார்,   சிறப்பாக    செயல்படாத    ஊராட்சி    மன்றங்களுக்கு  “விளக்கமாறு  விருதுகள்”    வழங்கினார்.  இது   மக்களுக்கு    அவர்மீது   வெறுப்பை   உண்டாக்கியது.

“ஆனால்,  அவர்  மந்திரி   புசாராக   இல்லாதபோதும்   13வது   பொதுத்   தேர்தலில்    சிலாங்கூரில்   தோல்விதான்   கிடைத்தது.  இதற்கான   காரணத்தை   சிலாங்கூர்   பிஎன்   கண்டறிய    வேண்டும்.     காரணம்   இருக்கத்தான்   செய்யும்.

“பெட்டாலிங்   ஜெயா   உத்தாரா   முன்பு   நான்கு   தவணைகள்    பிஎன்னிடம்  இருந்தது.  12வது  பொதுத்தேர்தலில்   பிஎன்   அதைத்   தோற்றது.

“தோல்விக்கான   காரணத்தைக்    கண்டறிய     வேண்டும்.  அதைக்  கண்டறிந்து   மீண்டும்   வெற்றிபெற    புதிய   அணுகுமுறையைக்  கடைப்பிடிக்க   வேண்டும்”,  என்று  தெங்கு   அட்னான்   நேற்று   பெட்டாலிங்   ஜெயா   அம்னோ   பேராளர்   கூட்டத்தில்   கூறினார்.