பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவுக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை பினாங்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் விசாரணைக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) கூறுகிறது.
பினாங்கு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எம்எசிசி செய்யத் திட்டமிட்டுள்ள மேல்முறையீட்டில் இது ஒரு காரணமாக இருக்கும்.
எம்எசிசி இந்த விவகாரத்தை மிகக் கடுமையானதாகக் கருதுகிறது, ஏனென்றால் இது அதனுடைய தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை நடைமுறையை ஆபத்திற்குள்ளாக்கும் என்று எம்எசிசி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறது.
பீ பூன் போ மற்றும் தொழிற்சாலையின் நிருவாகி ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட தடுப்பு உத்தரவை இரத்து செய்த பினாங்கு உயர்நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், நீதிபரிபாலன ஆணையர் அப்துல் வஹாப் முகமட்டின் தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஆகவே, நாங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முறையீடு செய்கிறோம் என்று எம்எசிசி அறிக்கை மேலும் தெரிவித்தது.
ஒன்று செய்யுங்கள். விசாரணையே செய்யவேண்டாம்! சிரமமே இருக்காது!