எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஜொகூர் மாநிலம் பக்காத்தான் ஹராப்பான் கைவசமாகுமென்று முஹிடின் யாஷின் ஆருடம் கூறியுள்ளார்.
ஜொகூர் மக்கள் ‘பல்வேறு சம்பவங்களால்’ தற்போதைய பாரிசான் நேசனல் நிர்வாகத்தின் மீது விரக்தி அடைந்துள்ளனர் என்று பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவருமான முஹிடின் தெரிவித்தார்.
“ஜொகூர் மாநிலத்தில் அதிகப் பிரச்சனைகள் உள்ளன. அதனால் மக்கள் ஆதரவு பக்காத்தானுக்கு அதிகரித்துள்ளது. எங்கள் நோக்கம் ஜொகூரைக் கைப்பற்ற வேண்டும் என்பதே’, என்றார் அவர்.
“ஜொகூர் மக்களுக்குப் பாரிசானைவிட சிறந்ததொரு ஆட்சியை வழங்குவோம் என வாக்குறுதி அளிக்கிறோம்”, என்று இன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் முஹிடின் தெரிவித்தார்.
முஹிடின் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் பற்றிய ஜொகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டினின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கையில் முஹிடின் இவ்வாறு கூறினார்.
மேலும், காலிட்டின் இந்தக் கருத்துகள் அவருக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றங்களின் அறிகுறிகளே என்றும் முஹிடின் கூறினார்.
ஐயா திரு முகுடின் அவர்களே வணக்கம் . நீங்களும் உங்கள் கட்சியும் ஆட்சி அமைப்பது இருக்கட்டும் , அதற்கு முன்பாக நீங்களும் , திரு மகாதீர் அவர்களும் ‘பூமிபுத்ரா , மலாய் இனம் என்று பிரிவினை செய்ய மாட்டோம் , இந்தியர் , சீனர் என இனம் பார்க்காமல் அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைப்போம் என உறுதி மொழி கூறுங்கள் , அதனை செயல்படுத்துங்கள் , அதன் பிறகு நீங்களும் உங்கள் பிரிபூமி கட்சியும் வெல்வதை பற்றி சிந்திப்போம் . நீங்கள் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் உங்களின் தமிழ் , சீன மொழி ஒழிப்பு ஏற்பாடுகளை எங்களால் இன்னும் மறக்க இயலவில்லை, மறைமுக இனம் ஒழிப்பு புகுதலை எங்களால் மறந்திட இயலாது .
முன்கூட்டியே நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கரப்பான் எப்போதோ ஒவ்வொரு வீட்டையும் கைப்பற்றிவிட்டது!