முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராகிம், “பல விசயங்களை மறைத்து வைத்துள்ள கயவர்களை அம்பலப்படுத்த” பக்கத்தான் தலைவர்கள் “மறைப்பதற்கு ஏதுமில்லை” போன்ற நிகழ்ச்சிகளை நிறைய நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மற்ற ஹராபான் தலைவர்களும் டாக்டர் மகாதிர் முகம்மட்டைப் பின்பற்றி அச்சமின்றி கடுமையான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். வெளிப்படையாகவும் பேச வேண்டும் என சைட் தமது வலைப்பதிவில் கேட்டுக்கொண்டார்.
“அச்சமும் அறியாமையும்தான் அவர்களின் (அக்கயவர்களின்) ஆயுதங்கள். மக்கள் அவர்களைக் கண்டு அஞ்சக் கூடாது. மாற்றுத் தலைமைத்துவம் அமைந்தால் மலேசியர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைவார்கள். மக்கள் இதுவரை பகடிவதை செய்வதையும் அபத்தமான பேச்சு பேசுவதையும் அரசியல் ஆதரவுக்காக பணத்தை வாரி இறைப்பதையும் வழக்கமாகக் கொண்ட தலைவர்களைத்தான் கண்டு வந்திருக்கிறார்கள். அதன் விளைவாக அயோக்கியர்களும் கயவர்களும் பெருகி விட்டனர்.
“இதற்கு முடிவு கட்டுவோம். மலேசியர்களை மரியாதையாக நடத்துவோம். அவர்களுக்குச் சரியான தகவல்களை வழங்குவோம், அவர்கள் சரியான கண்ணோட்டம் பெற உதவுவோம். அரசியல்வாதிகள் நினைப்பதைவிடவும் மலேசியர்கள் கெட்டிக்காரர்கள்”, என்று சைட் கூறினார்.
ஐயா , நீங்கள் சொல்வது உண்மையே , ஆனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாது என்று பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது யார் ? காவல்துறைக்கு உத்திரவு இடுவது யார் ? கூட்டத்தில் கலந்துக்கொள்ள யோசிக்கவேண்டியுள்ளது .