ஜாஹிட்: ‘கிழவர் காலத்து’ ஐஎஸ்ஏ அளவுக்கு மோசமானதல்ல பொக்கா

isaமுன்னாள்   பிரதமர்  டாக்டர்  மகாதிர்   காலத்து  நிர்வாகத்தைச்   சாடிய   துணைப்  பிரதமர்   அஹமட்   ஜாஹிட்  ஹமிடி,   1959 குற்றத்தடுப்புச்   சட்டம் (பொக்கா)   உள்நாட்டுப்   பாதுகாப்புச்   சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்    அளவுக்கு   மோசமானதல்ல    என்றார்.

பொக்கா   சட்டத்தில்    உள்துறை   அமைச்சரின்    அதிகாரம்   வரையறுக்கப்பட்டிருப்பதாக   ஜாஹிட்  கூறினார்.

“முந்தைய   ஐஎஸ்ஏ-யில்   பேசிக்கொண்டிருக்கும்   நானே   ‘ஒரு   வயோதிகரால்’    கைது    செய்யப்பட்டிருக்கிறேன்.

“இப்போது   (அக்கிழவர்)   கருத்துவேறுபாடுகளுக்கு    இடமளிக்க    வேண்டும்   என்கிறார்.  ஆனால்,  அவர்    ஆட்சியில்   இருந்தபோது   கருத்துவேறுபாடுகளை   ஏற்றுக்கொண்டதில்லை”,  என  ஜாஹிட்   கூறினார்.

இது   பழைய   கதை.  பலர்   மறந்திருக்கலாம்.   ஆனால்,  தாம்  இன்னும்  மறக்கவில்லை    என்றாரவர்.

ஜாஹிட்   1998-இல்   நாட்டின்   பாதுகாப்புக்கு  மருட்டலாக   இருப்பதாகக்  குற்றஞ்சாட்டப்பட்டுத்   தடுத்து   வைக்கப்பட்டிருந்தார்.

அதே   ஐஎஸ்ஏ-இல்    முன்னாள்    துணைப்   பிரதமர்   அன்வார்  இப்ராகிமும்    அப்போதைய    நெகிரி    செம்பிலான்   அம்னோ  இளைஞர்   பிரிவுத்     தலைவர்   ரஸ்லான்   காசிமும்   தடுத்து  வைக்கப்பட்ட    மறுநாள்   ஜாஹிட்  கைதானார்