மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பெல்டா முன்னாள் தலைவர் இஸா சாமாட்டை இன்று பிற்பகல் மணி 4.24 அளவில் கைது செய்தது.
பெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பொரேசன் வாங்கிய இரண்டு ஹோட்டல்கள் சம்பந்தமாக அவர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கிடையில் லண்டனில் ஒன்றும் சரவாக்கில் ஒன்றும் வாங்கியது சம்பந்தமாக எம்எசிசி, புத்ராஜெயாவில் இன்று அவரிடமிருந்து வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்த 2 மணி நேரத்திற்குப் பின்னர் அவரைக் கைது செய்தது.
பின்னர் தொடர்பு கொண்ட போது, எம்எசிசி துணை ஆணையர் அஸாம் பாக்கி கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
இஸா எம்எசிசி தலைமையகத்திற்கு இரண்டு வழக்குரைஞர்களுடன் வந்தார். ஆனால், அவர் மட்டுமே அலுவலகத்திற்குள் சென்றார்.
கீர்த்தோயோ கைது ஆனாபோதே இசா சாமாட்டையும் கைது செய்து இருக்க வேண்டும் இவனுங்க மாநில மந்திரி பெசாராக இருந்த போது அடித்த கொள்ளை பிரதமர்களுக்கே தெரியும்…
எல்லாம் கண்துடைப்பு.
இது ஒரு சிறந்த நாடகம். எந்த ஒரு ஆதாரமும்
நிரூபிக்க பட முடியவில்லையென்று அவரை விட்டுவிடுவார்கள். இதுதான் இந்த நாடகத்தின் முடிவு.
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவுக்கு லாக்கப் அணிகலன்,
பெல்டா முன்னாள் தலைவர் இஸா சாமாட் என்ற திருட்டு நாதாரிக்கு கோட்சூட்.
SPRM நேர்மைக்கு SPRM-மே ஆப்பு வைத்து கொள்ளும் என்று கனவிலும் எண்ணவில்லை..
கவலை வேண்டாம் இசா அவர்களே, அடுத்த தேர்தலுக்குப் பின் நீங்கள் செனட்டர் ஆக்கப்பட்டு அமைச்சர் ஆகி விடுவீர்கள். தேர்தலுக்கு முன் பலியிடல்களை செய்தாவது, வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயம் பிரதமருக்கு உண்டு.