கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் விற்கப்படும் குழந்தைகளுக்கான பால் மாவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் 1985ம் ஆண்டுக்கான உணவுப் பொருள் விதிமுறைகள் சட்டம் வரையறுத்துள்ள வரம்பை மீறுவதாக டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி கூறுகிறார்.
கெடாய் ராக்யாட் கடைகளை நடத்தி வரும் மைடின் முகமட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டுக்கு எதிரான தாக்குதலைத் தொடர்ந்த அவர், “ஒரே மலேசியா வளருவதற்கான பாலில்” ( ‘1Malaysia Growing Up Milk’) “விட்டமின் ஏ அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எட்டு மடங்கு கூடுதலாக” இருப்பதாகக் கூறிக் கொண்டார்.
“விட்டமின் ஏ அளவு 100kcalக்கு 6012 IU (international units)ஆக அல்லது கூடின பட்ச கட்டுப்பாட்டு வரம்புக்கு மேல் 802 விழுக்காடு இருக்க வேண்டும்” எனக் கூறிக் கொண்ட அவர் தமது ஒப்பீட்டுக்கு உணவுப் பொருள் விதிமுறைகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வரம்புகளை எடுத்துக் காட்டினார்.
அந்த குறைந்த விலைக் கடையில் விற்கப்படும் பொருட்கள் பற்றி புவா ஏற்கனவே தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மைடின் நேற்று நிராகரித்தது. அதிகரித்து விட்ட வாழ்க்கைச் செலவுகளை மக்கள் சமாளிப்பதற்கு உதவியாக கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகள் கடந்த ஜுன் மாதம் முதல் அமைக்கப்பட்டு வருகின்றன.