“பிரதமர் நஜிப்பை வீழ்த்த நினைக்கும் எனது ஆதரவாளர்கள் நடுங்கக்கூடாது…யாருக்கும் பயப்படக்கூடாது”, மகாதிர்

 

M1மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அமளி தமது வாயை அடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று மகாதிர் நம்புகிறார்.

அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள மறுத்த அவர், தாம் தொடர்ந்து உண்மையைப் பேசப் போவதாக சூளுரைத்தார்.

“என் வாயை அடைப்பதற்கு ஒரு கட்சி வன்முறையைப் பயன்படுத்தப் பார்க்கிறது, அது சாத்தியமில்லை. வழக்கம் போல் நான் உரத்துப் பேசுவேன்”, என்றாரவர்.

தாம் எப்போதும் வெளிப்படையாக பேசுவதாகவும் மற்றவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப் பற்றி அலட்டிக்கொள்வதில்லை என்றும் கூறிய மகாதிர், உண்மை உரைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

“நான் அரசியலில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளேன். இந்தச் சவால்களை எல்லாம் எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த அமளி அல்லது இதைவிடப் பெரியதாக ஏதேனும் திட்டமிடப்பட்டிருந்தாலும், அது எனது எழுச்சிமிக்கநிலையை குலைத்துவிட முடியாது”, என்று இன்று மாலை ஒரு வீடியோவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அவரது முகநூல் பதிவில் மகாதிர் கூறுகிறார்.

பெர்சத்து மலேசியாவின் அவைத் தலைவரான அவர், மக்கள் உண்மையைப் பேச பயந்தால் கொடுங்கோல் ஆட்சி புரியும் என்று அறிவுறுத்தினார்.

M2அவரது வீடியோ பதிவில், அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பெர்சத்து இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் மனம்தளர்ந்துவிடக் கூடாது என்றும் போராட்டத்தைத் தொடர வேண்டுமென்றும் என்றும் அவர்களுக்கு மகாதிர் ஆலோசனை கூறினார்.

அரசியலில் கேளிக்கையும் உண்டு, தாங்கொண்ணா துன்பமும் உண்டு என்று கூறிய அவர், இது நமது இலட்சியத்தைப் பலவீனப்படுத்தக் கூடாது என்றார்.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வீழ்த்தும் நோக்கமுடைய எனது ஆதரவாளர்கள் நடுங்கக்கூடாது…யாருக்கும் பயப்படக்கூடாது”, என்று மகாதிர் மேலும் கூறினர்.