1985 மெமாலிச் சம்பவத்தை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று பாஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆர்சிஐ அமைக்கப்பட்டால் அது அன்று உண்மையில் நடந்தது என்ன என்பதைக் கண்டறியும் பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் மான் கூறினார்.
“உண்மைக்கு முரணான பல்வேறு கூற்றுக்களையும் பார்க்கையில் மெமாலிச் சம்பவம் குறித்த உண்மைகளை வெளிக்கொணர நியாயமான, வெளிப்படையான விசாரணை தேவை என பாஸ் விரும்புகிறது”, என துவான் இப்ராகிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
ஆர்சிஐ அமைக்கப்படுவது அந்த 1985 துயரச் சம்பவத்தின் குற்றவாளிகளின் பட்டியலிலிருந்து பல அப்பாவிகளின் பெயர்களை நீக்க உதவியாக இருக்கும் என்றாரவர்.
32 ஆண்டுகளுக்கு முன்பு கெடா, மெமாலியில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், போலீசார் பாஸ் தலைவர் இப்ராகிம் ‘லிபியா’ முகம்மட்டைக் கைது செய்ய முயன்றபோது கைகலப்பு மூண்டு 14 கிராமவாசிகளும் நான்கு போலீசாரும் கொல்லப்பட்டனர்.
மகாதீர் கூறுவதைபோல்
“போலீசை கொன்றால் அதன் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும்”.
மாறாக போலீஸ் பி.ராம்லி தாலாட்டு பாட்டு பாடி கொஞ்சி குலவி பால் ஊட்ட வேண்டும் என்று PAS எதிர்பார்ப்பது மடத்தனம்.