ஃபெல்டாவின் முன்னாள் தலைவர் இசா சமட் கைது செய்யப்பட்டது ஓரு பெரிய விசயம்போல் தெரிகிறது. ஆனால், அது வெறும் கண்துடைப்பாக அமைந்து விடக்கூடாது என்கிறார் பிகேஆர் தலைவர் ஒருவர்.
இசா நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கப்பட வேண்டும். அதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின் கூறினார்.
“கைது செய்வது பெரிதல்ல. இசா ஃபெல்டா தலைவராக இருந்தபோது அங்கு ஊழல், அதிகாரமீறல், நிதிமுறைகேடுகள் நிகழ்ந்துள்ளனவா என்பதை முடிவு செய்ய அவரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
“அரசாங்கம் பலரையும் கைது செய்வதுபோல் நாடகமாடிக் கொண்டிருக்கக்கூடாது. இதுவரை எவரும் நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றஞ்சாட்டப்படவில்லை. குற்றஞ்சாட்டப்படாமல் வெறுமனே கைது செய்யப்படுவதைப் பார்த்து மக்களுக்கு அலுத்துப் போய்விட்டது”, என்று ஷ்ம்சுல் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
நான் தான் நேற்றே சொல்லிவிட்டேன்-அது கண்துடைப்பு என்று? பிறகு என்ன? இது மாதிரி நாம் எத்தனை பார்த்து விட்டோம்?