எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளை, பிரதமர் நஜிப் தனி ஒருவராக சமாளிக்க விடக்கூடாது எனத் துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி நாட்டு மக்களைக், குறிப்பாக அம்னோ உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் நஜிப் மக்கள் நலனுக்காகப் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டு வர பாடுபடுகிறார். இதனை உணராமல், எதிர்க்கட்சியினர் அவரைக் குறைகூறி வருகின்றனர் என்று ஷாஹிட் கூறினார்.
“ நமது பிரதமரைத் தனிஒருவராக விடாதீர்கள். அவர் செய்வது எல்லாம் நாட்டு மக்கள், குறிப்பாக, அம்னோ உறுப்பினர்கள் நலன் கருதியே என்பதை நாம் உணர வேண்டும்,” என, இன்று கூலிம்/பண்டார் பாரு அம்னோ பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து துணைப் பிரதமர் பேசினார்.
முன்னாள் அம்னோ தலைவர் ஒருவர் கூறிவரும் குற்றச்சாட்டுகளை அம்னோ உறுப்பினர்கள் பொருட்படுத்தக் கூடாது. இன்றைய அரசியல் சூழலுக்கு அவர் பொறுத்தமில்லாதவர். அம்னோ மற்றும் தேசிய முன்னணியை, இப்போது நம்முடன் இருக்கும் தலைவர்கள் நிர்வகிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டுமெனவும் ஷாஹிட் தமதுரையில் கூறினார்.
‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்வில் நடந்த வன்முறைக்கு, அம்னோவைக் குறை சொல்வதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென ஷாஹிட் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில், அம்னோ குற்றம் சாட்டப்படுவதை தான் விரும்பவில்லை எனவும், உள்துறை அமைச்சர் என்ற முறையில், அச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள காவல்துறையினரைப் பணித்துள்ளதாகவும் ஷாஹிட் மேலும் கூறினார்.
நான் செத்தா நீங்களும் என்னோடு சேர்ந்து சாவுங்கள் என்று அழைக்கின்றார்? யார் போகத் தயார்?
போடா ………
கொள்ளை அடித்தவன் ஒருவனாக இருந்தாலும் அடித்த கொள்ளையில் நன்கொடை பெற்றதால் அனைவரும் அக்கொள்ளை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என ஷாஹிட் கூறுவது நியாயம்.
ஆனால் கொலை குற்றச்சாட்டுக்களையும் சேர்த்து அனைவரும் எதிர்கொள்ள வேண்டும் என்று ஷாஹிட் கூறியிருந்தால் அது அநியாயம்.
ஆமாம்! நீங்கள் அனைவருமே குற்றவாளிகள் என்பதை மறந்து விடாதீர்கள்!
இவருடைய “சகுனி ” ஆட்டம் ஆரம்பித்து பல நாட்கள் ஆகிவிட்டாகிவிட்டது . தற்போது இன்னும் மேலே சென்று நெருப்பு கல் (batu api ) விளையாட்டை சதுரங்கமாக துவங்கிவிட்டார் அக்கட்சியில் உள்ளவர்கள் சிந்தனை இல்லா கை தூக்கும் இனம் என்பதலால் . நாம் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.
யாருக்காக பாடுபடுகிறார் ? சொந்த மற்றும் குடும்ப நலனுக்காகவே. கொள்ளையடித்தவை நிரூபணமானால் கம்பி எண்ண வேண்டிவரும். பதவிப் பறிபோனால் சிறைவாசம்தான். பதவியை தற்காத்துக்கொள்ள “பக்கவாத்யங்களுக்கு” சில்லறைகளை விட்டெறிகிறார். மக்களின் வரிப்பணத்தை நாட்டின் மேம்பாட்டிற்கும், மக்களின் நலனுக்காகவும் பயனடையச்செய்வது அதிகாரத்திலுள்ளவர்களின் கடமையாகும். கடமையாற்றுவதற்கு சம்பளம் வாங்குகிறார், நமது வரிப்பணத்திலிருந்து. நம் சக்தியை நாம் உணராமல் இதுபோன்ற ஜென்மங்களை தலையில் அமரவைப்பதால் இவர்கள் தலைக்கொழுத்தாடுகிறார்கள். நம்மை அடக்கியாள முற்படுகின்றனர். மறைப்பதற்கு ஒன்றுமில்லையென்றால், எந்தவொரு கேள்விக்கும் ஏன் இதுநாள்வரையில் முறையான பதிலில்லை. “அடிதடி” சாதனைத் தலைவர் பாணியில் அம்னோவிலும் அரங்கேற்றுகிறார்கள் ! இவரின் நிர்வாகம் சரியாக இருந்தால் விலைவாசி உயர்வு, பணவீக்கம், அன்னியக்கடன் என்று நாடும் மக்களும் ஏன் அல்லலுற வேண்டும் ? எல்லா வளமுமுள்ள நம் நாடு கடன் வாங்குகிறது ! எந்த வளமுமில்லாத சிங்கப்பூர் பிறநாடுகளுக்கு கடன் கொடுக்கிறது ! இதில் “malaysia boleh” என்று பீற்றல் வேறு. வெட்கக்கேடு !
உண்மையில் நாம்மால் தேர்தல் வாயிலாக தேர்வு செய்யப்படும் இவர்கள் நம் சேவையாளர்கள். நாம்தான் இவர்களின் முதலாளிகள். ஆனால் பதவியில் அமர்தவுடன் தன் குடும்பதினர்களுக்கு மட்டுமே சேவை செய்கின்றனர்.