பினாங்கில் உள்ள கப்பளா பத்தாஸ் ஒரு காலத்தில் மலேசியாவின் ஐந்தாம் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவியின் கோட்டை. அது பரபரப்போ சுறுசுறுப்போ இன்றிதான் காட்சியளிக்கும். ஆனால், நேற்று அந்தத் தூங்கமூஞ்சி நகரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
அங்கு பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா தலைவர்களும் ஆதரவாளர்களும் திரண்டிருந்ததுதான் இதற்குக் காரணம். அங்கு அக்கட்சிக் கூட்டமொன்று நடந்தது. அதில் உரையாற்றிய பெர்சத்து அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் தலைவர் முகைதின் யாசினும் கப்பளா பத்தாஸ் மக்கள் பக்கத்தான் ஹராபானுக்கே வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
“நாட்டை மூர்க்கர்களும் கொள்ளையரும் ஆள்வதற்கு அனுமதிக்காதீர்கள்”, என்றார் மகாதிர்.
மலேசியா, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அப்துல்லா ஆகியோரின் ஆட்சிக்கு முன்னர் எப்படி இருந்ததோ அந்த நிலையைத் திரும்பக் கொண்டு வரப்போவதாக மகாதிர் வாக்குறுதி அளித்தார் .
கூட்டத்தினர் அவரது உரையைக் கேட்டு “ஹிடுப் துன்(வாழ்க துன்)” என்று முழங்கினர்.
தாம் 92வயதுக் “கிழவன்” என்பதையும் மகாதிர் அவர்களுக்கு நினைவுறுத்தினார்.
“என்னால் நீண்ட நேரம் பேசவோ நிற்கவோ முடிவதில்லை. ஆனாலும், என்னால் நிறைய வேலைகளைச் செய்ய முடியும்”, என்றவர் கூறியதைக் கூட்டத்தினர் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
பெர்சத்து கட்சிக்கு ஆதரவில்லை என்று கூறப்படுவதை மறுத்த அவர், அங்கு வந்துள்ள கூட்டமே அதற்குச் சான்று என்றார்.
ஹிடுப் துன் என்று மலாய்க்காரர்கள் சொன்னால் அதில் உண்மை இருக்கிறது ,ஆனால் அதுவே ஒரு தமிழன் சொன்னால் அவன் பைத்தியக்காரன் என்று அர்த்தம் .சமூதாய முன்னேற்றத்துக்கு கல்வியே மூளாதாரம் என்பது
மகாதீருக்கு நன்றாகவே தெரியும் ! இந்திய சமூதாயம்
கல்வி அறிவைக்கொண்டு முன்னேறிவிடுமோ என்று பயந்த
இவர், நமது மாணவர்கள் மாரா கல்லூரியில் சேர்ந்து படிக்க
முடியாதபடி தடை செய்தார் ! கல்வியில் பின்தங்கிய
மலாய் சமூகத்துக்காக 1-3-1966 ரில் தோற்றுவிக்கப்பட்டதுதான்
இந்த மாரா கல்லூரி. இதில் பூமிபுத்ராக்கள் மட்டுமே படிக்க
முடியும். இது மலாயா அரசியல் சாசனம் 153 ஆவது பிரிவின்
கீழ் கொண்டுவந்த சட்டத்தின்படி “ மலாய்க்காரர்களின்
சிறப்புரிமை அந்தஸ்தை வழங்கும் திட்டம் . ஆனால் இந்த
சாசனம் ஐக்கிய நாட்டு சபையின் கோட்பாடுகளுக்கு விரோதமாக
இன பேதம் கொண்டது என்று சில நல்ல உள்ளங்களுக்கு
தெரிந்ததால், பிரச்சினை நாடாளுமன்றம் வரை கொண்டு
செல்லப்பட்டது . டான் சீ கூன் போன்றவர்கள் நாடளுமன்ற
சிறப்பு விவாதத்தில் பங்கேற்று வாதிட முற்பட்டனர். ஆனால்
மலாய்க்கார மாணவர்கள் மட்டுமே அதில் படிக்க முடியும் என்று
அப்போது கல்வி அமைச்சராக இருந்த மகாதீரால் கட்டாய
சட்டம் கொண்டுவரப்பட்டது !
மகாதீர் திருந்திவிட்டான், இனிமேல் நமது தமிழ் சமுதாயத்துக்கு அவன் உதவுவான் என்பதெல்லாம் அவனின் சித்து விளையாட்டுகளில் ஒன்று! பிறவி குனம் மாறாது என்பது மனோதத்துவ நிபுணர்களின் கூற்று!!பொதுவாகவே மகாதீரின் அரசியல் பாதையின் மறுபக்கத்தை
பார்த்தால், ஒரு கொள்கையற்ற, சுயநல தன்மை கொண்ட
அரசியலை அவர் வழிநடத்தி வந்திருப்பதை நன்கு உணர
முடியும். ஆனால் அவருக்கென்று ஒரே ஒரு லட்சியம் இருந்தது.
அதுதான் அவரின் மகனான முக்ரீஸை எப்படியாவது, என்ன
விலை கொடுத்தாவது, லிம் கிட் சியாங் காலில் விழுந்தாவது
பிரதமராக்கிட வேண்டும் என்பதே !!!
இவர் நமது சமூதாயத்திற்கு விரோதமாக செய்த மகா பாதகமான
காரியங்களில் ஒன்றுதான், அரசாங்க பல்கலைகழகங்களில் நமது
மாணவர்களின் நுழைவு எண்ணிக்கையை கட்டுப்படுத்தியது.
இதுவே மிகவும் கேவலமான, மனிதத்தன்மையற்ற செயல் என்று
என்னத்தோன்றுகிறது. அதற்காக இவர் பாவித்த நரித்தந்திரமான
சித்து வேலையை, அன்று ம.இ.காவில் மிகவும் அறிவு ஜீவியான
சாமிவேலுவுக்கே விளங்காமல் போயிற்று என்றால்
பார்த்துக்கொள்ளுங்களேன் ! இது சம்மந்தமாக ஒரு முன்னனி
தமிழ் பத்திரிக்கையில், 7-2-2016 ஆம் தேதியில் நாராயணன்
என்பவர் மெர்சிங்கிலிருந்து கேட்ட கேள்விக்கு, பத்திறிக்கை
ஆசிரியரால் கொடுக்கப்பட்ட கேள்வி பதிலை கீழே காணவும் ;
கே: நமது இந்தியர்களுக்கான கோட்டா முறை தொடர்ந்து
நிலைநிறுத்தப்பட்டு இருந்திருக்குமானால் இன்று பல்கலைகழகம்
வரையிலும் இதர துறைகளில் நமது உரிமைகள் தொடர்ந்து
நிலை நிறுத்தப்பட்டு இருக்கும்தானே ?
ப: கோட்டா முறை அகற்றப்பட்டால், விழுக்காடு ரீதியாக நமக்கு
வழங்கப்பட்டுள்ள உத்தரவாதம் காலப்போக்கில் அகற்றப்படலாம்
என்று ம.இ.காவின் உன்மையான போராட்டவாதிகளான
தங்காக் முத்து போன்றவர்கள் அப்போதே சாமிவேலுவை
எச்சரித்து இருந்தார்கள். இப்படி ஒரு கோரிக்கை விடுப்பது, தேச
நிந்தனை குற்றம் போல பிரதமரின் பரிந்துரையை மீற முடியாது
என்று கூறி, ஓரிரவிலேயே தங்காக் முத்துவை கட்சியிலிருந்து
நீக்கினார் சாமிவேலு. அதன் வினைப்பயனைத்தான் இப்போது
நாம் அறுவடைசெய்து கொண்டு இருக்கிறோம். அட வந்தவன்தான்
சரியில்லை என்றால் வாய்ச்சவன் அவனுக்கு சுப்பன் !
நமது சமூதாயத்தின் போதாத காலமோ என்னவோ போங்க,
இந்த மகாதிர், அவரது பதவி காலம் முடியும் ஒருசில
மாதங்களுக்கு முன்பு வரை நமது சமூதாயத்துக்கு ஏதாவது
கெடுதல் செய்துகொண்டே இருந்தார் என்பதற்கு ஆதாரமாக
2003 ரில், இவர் உக்ரைனுக்கு சென்றிருந்தார். அவரின்
வருகையின் ஒரு பகுதியாக அங்குள்ள பிரசித்தி பெற்ற
கிரிமியா மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார்.
அதன் பிறகு கிரிமியா பல்கலைகழகத்தின் மருத்துவ பட்டப்
படிப்பை மலேசியா, மகாதீரின் உத்தரவினால் மறு ஆய்வு
செய்கிறது என்று அப்போதைய கல்வி அமைச்சர் மூசா முகம்மட்
அறிக்கை விட்டார் ! என்னடா….இது, ஆதாயம் இல்லாமல்
மகாதீர் ஆற்றைக்கட்டி இரைக்கமாட்டாரே, என்று சிந்தித்த பொழுது
தான் உன்மை நிலவரம் புரிந்தது, அந்தப்பல்கலைக்கழகத்தில்
படித்த மருத்துவ மாணவர்களில் பெரும்பாலோர் மலேசிய
இந்திய மாணவர்கள் !! இப்படியாக மலேசிய இந்தியர்களின்
முன்னேற்றத்துக்கு முக்கிய அம்சமாக விளங்கிய கல்விப்
பாதைகள் அனைத்தையும் அடைத்துப்போட்டார் இந்த
மாமனிதர் மகாதீர். மலேசிய இந்தியர்களுக்கு எதிராக இவர்
செய்த செயல்கள் யாவும் அன்று இரண்டாம் உலகப்போரின்
போது கொடுங்கோலன் அடொல்ப் ஹிட்லெர் யூத இனத்துக்கு
எதிராக விதித்த பொருளாதார தடைக்கு ஒப்பாகவே இருந்தது.
எனது அப்பாவி தமிழ் சமுதாயமே ! இந்த மகாதீரைநம்பி மீண்டும் மோசம் போய்விடவேண்டாம் !! அவன் இருக்கும் கட்சி நமக்கு புதைகுழி என்பதை மறவாதீர்!!!
மகாதீர், மண்ணைத் தோண்டி அதில் இந்தியச் சமுதாயத்தை போட்டார் என்றால் அவரின் “சகா” அதில் மண்ணைப் போட்டு மிதித்து-புதைத்து சாதனைப் படைத்தார். வாழ்க மலேசிய “சாதனைத் தலைவர்கள்”.
அவருக்கு பின் வந்தவர்களும் நமக்கு எந்த நன்மையையும் செய்யவில்லையே.ஆக இப்போ இருப்பவனும் அப்படித்தானே இருக்கிறான். அவனாவது நேருக்கு நேர் நம் கண் முன்னே செய்தான். ஆனால் இவனோ நம்பிக்கை நம்பிக்கை என்று சொல்லி ஏமாற்றுகிறான். நமது தலைவர்கள் என்று கூறிக்கொண்டவர்களும், இப்போது கூறிக்கொள்பவர்களும் என்ன செய்தார்கள் , என்ன செய்கிறார்கள்? அவரவர் சுயநலத்தை பார்த்துக்கொண்டு நம்மை பகடை காயாக பயன்படுத்திக்கொள்கின்றனர். நம்மிடையே ஒற்றுமை உண்டா? எந்த துறையை பார்த்தாலும் நமக்கு எதிரி நாமாகத்தானே இருக்கிறோம்.5 காசு பொருளென்றாலும் நம்மவரிடம் அந்த பொருள் இருந்தாலும் ம் மற்றவனிடம்தானே அதனை வாங்குகிறோம். இதுபோல பல முறை எழுதியுள்ளேன், பலரிடம் பேசியும் உள்ளேன் – எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காக போய்விட்டது.அநேகர் தமிழையும் தமிழினத்தையும் தத்தம் சுய ஆதாயத்திற்காக விற்றுவிட்டார்கள்.தமிழை பற்றியும் தமிழனின் பழமை சாதிப்புகளையும் இன்று உலகமே ஏற்றுக்கொண்டு பாராட்டுகின்றது. அதே நேரத்தில் அதனை பாதுகாக்க எவனும் முன் வரவில்லை. மாறாக அதனின் உண்மைகளை திருடி, திரித்து அவனுடையது என்று உரிமை கொண்டு நம்மிடமே கொடுத்து நம்மை மேலும் மேலும் ஏமாற்றுகின்றான். எப்பொழுது நாம் விழித்தேழுவோம்?