கிள்ளான் தெங்கு அப்புவான் ரஹிமா மருத்துவமனை சிற்றுண்டி உணவகத்தில் எலி விருந்துண்ணும் காட்சி வீடியோவில் காணப்பட்டததைத் தொடர்ந்து அந்த சிற்றுண்டிசாலையை மூடும்படி நேற்று மதியம் மணி 2.00 அளவில் உத்தரவிடப்பட்டது. ஆனால், அன்றய தினமே இரவு மணி 10 அளவில் அது மீண்டும் திறக்கப்பட்டது.
அந்த சிற்றுண்டிச்சாலை ஏன் மீண்டும் அதே நாளில் திறக்கப்பட்டது? மருத்துவமனைக்கு வருகையளிப்பவர்கள் மற்றும் மருத்துமனை பணியாளர்களின் நலன்களைக் கவனத்தில் கொண்டு அந்த உணவகம் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டதாக சிலாங்கூர் சுகாதார இலாகா இயக்குனர் ஸைலான் அட்னான் கூறினார்.
(ஆனால், கவலைப்பட வேண்டாம்.) அந்த மருத்துவமனை சிற்றுண்டிச்சாலையின் சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் மீது சுகாதார இலாக கவனம் செலுத்தும் என்றும் அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அந்த உணவகத்தை நடத்தும் குத்தகையாளர் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவதுடன் குத்தகை இரத்து செய்யப்படும் என்றும்கூட அவர் கூறினார்.
உணவகத்தின் உரிமையாளர் நாஜிபு அல்தான் தூயா உறவினரோ என்னவோ.?
HARAM பட்டியலில் பன்றியும், நாயும் தான் உள்ளது ! எலியில்லாததால் மீண்டும் திறப்பதற்கு அனுமதித்திருப்பார்கள் அல்லது பணம் பல்லிளித்திருக்கும். இதுவே இந்தியர் நடத்தும் சிற்றுண்டிச்சாலையாக இருந்திருந்தால் இழுத்து மூடியிருப்பார்கள். “அப்பீல்” கிடையாது !
ஏன் அடிக்கடி எச்சரிக்கை விடப்பட வேண்டும்? உணவகம் நடத்துபவருக்கு சுத்ததை பற்றி ஒன்றும் தெரியாதா?
திரு பீஷ்மான் ( Beeshman ) உண்மையை அனைவருக்கும் விளக்கி விட்டார் , இனி பேசி , விவரித்து கூற ஏதும் இல்லை .
Beeshman HARAM பட்டியலில் பன்றியும், நாயும் உள்ளது.
முஸ்லீம் நாடான துருக்கியில் முஸ்லீம்கள் வீட்டில் நாய் வளர்க்கிறார்கள், பன்றி கறி சமைக்கும் உணவகங்களில் சாப்பிடுகிறார்கள். இதையெல்லாம் பெரிது படுத்துவதில்லை.
ஆனால் THIRLD WORLD COUNTRY முஸ்லிம்கள்தான் பழைய பஞ்சாங்கத்தை பாடி கொண்டிருக்கின்றனர்.