பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்தில் பல்வேறு குறைகள் நிலவுவதாகக் கூறி எதிரணி என்னதான் தாக்குதல் தொடுத்தாலும் பிஎன் வலுவிழக்காது என்கிறார் குவாங் மூசா எம்பி தெங்கு ரசாலி ஹம்சா.
அரசியலில் இதெல்லாம் சகஜம்தான் என்று கருதும் மக்கள் அவர்கள் எழுப்பும் விவகாரங்களை நம்ப மாட்டார்கள் என்றாரவர்.
“எந்தவொரு விவகாரமும் மக்களிடம் பிஎன்னுக்குள்ள ஆதரவைக் குறைத்து விடாது என்றுதான் நினைக்கிறேன்…….மக்கள் விவேகமிக்கவர்கள் நல்ல முடிவாகத்தான் எடுப்பார்கள்”, என்று நேற்று குவா மூசாங்கில் அவர் கூறினார்.
குவா மூசாங் அம்னோ தொகுதித் தலைவருமான தெங்கு ரசாலி, மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்றாலும் 14வது பொதுத் தேர்தலில் பிஎன்னை நிராகரிக்க அது போதுமான காரணமாக இருக்காது என்றார்.
இந்த மூத்த அரசியல்வாதி என்ன பேசுகின்றார் ? படாவியைப்போல் நாட்டின் நலனிற்கு குரல்கொடுக்க திராணியற்றவரா ? அல்லது, வாயைத் திறந்தால் “மேலே” அனுப்பிவிடுவார்கள் என்று அஞ்சுகிறாரா ? விலைவாசி உயர்வு ஒன்று போதாதா நாட்டை நிர்வகிக்க இந்த அரசாங்கம் தகுதியற்றது என்பதை பறைசாற்ற.
கூலி …… டோய் அந்தர் பைடி அடிக்கிறான் பாருங்க் குழிக்கு போயி சேர வேண்டிய காலத்தில் இறைவனுக்கு சிறிதும் பயம்மில்லாமல் பணத்துக்கு அடிமையாகி மலாய் இனத்தவனுக்கே உரிய லஞ்சத்துக்கு அடிமையாகி இறைவனை மறந்தான்