விசாரணைக்காக 5-நாள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெல்டா முன்னாள் தலைவர் முகம்மட் இசா அப்துல் சமட் , அவரது தடுப்புக்காவல் காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து இன்று விடுவிக்கப்பட்டார்.
அவர் ரிம150,000 ரொக்கம் , சொந்த நபர் ஜாமின் ரிம350,000 மேலும் இருவரின் உத்தரவாதத்தின்பேரில் விடுதலையானார்.
இசா, பெல்டா துணை நிறுவனம் பெல்டா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேசன் (எப்ஐசி) இலண்டனிலும் கூச்சிங்கிலும் இரண்டு ஹாட்டல்கள் வாங்கியது தொடர்பான விசாரணைக்கு உதவியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவர் சீக்கிரம் வெளிவருவார், அடுத்த தேர்தலில் வேட்பாளராக நிற்காமல் கூட அமைச்சர் ஆக்கப்படுவார் என்பது எல்லாம் மக்கள் முன் கூட்டியே ஆருடம் கூறியதே. இம்மாதிரியான வேடிக்கைகள் மலேசியர்களுக்கு புதியதல்லவே!
அரசியல்வாதி பணமூட்டையைச் சுமக்கிறான். மக்கள், அவனின் பாவமூட்டைகளை சுமக்கின்றனர். அரசியல் விழிப்புணர்வு ஏற்படாத வரையில் இது ஒரு தொடர்கதைதான். நாட்டு நடப்பை “நாலு” பேர்கள் அரியச் செய்வோமானால் அதுவே நாம் செய்யும் நல்லப்
நல்லப் பணியாகும்.
தடுப்புக் காவலில் இருந்தாலும் அவருக்கு ராஜ வாழ்க்கை தான்! அவரை எல்லாம் யாரும் ஒன்றும் செய்து விட முடியாது!
இசா சமட் பிணையில் விடுதலை ஆனாலும் FELDA காவி வர்ணத்தில் LOKAP சட்டை அணிவித்து அழைத்து வந்த காட்சி மலேசியர்களை அகம் மலர செய்து விட்டது.