பாஸ் கட்சி இப்போது எதிரணியின் முன்னணியில் உள்ள டாக்டர் மகாதிர் முகம்மட்டைத் தாக்குவதற்குதான் கிடப்பில் கிடந்த மெமாலி விவகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கிறது என்று கூறப்படுவதை அக்கட்சித் தலைவர் ஒருவர் மறுத்தார்.
முப்பதாண்டுகளுக்கு முந்திய மெமாலி சம்பவம்மீது அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) தேவை என்று பாஸ் கட்சி கோரிக்கை விடுத்திருப்பதைத் தற்காத்துப் பேசிய அதன் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் அது நீதிக்காக நடத்தப்படும் போராட்டம் என்றார்.
“பாஸுக்கு மகாதிரையோ வேறு தனிப்பட்டவர்களையோ தாக்கும் நோக்கம் கிடையாது.
“நாங்கள் எந்தக் கட்சியின்மீதும் குற்றச்சாட்ட விரும்பவில்லை, நீதிக் கோட்பாடு நிலைநிறுத்தப்படுவதையே விரும்புகிறோம்”, என்றாரவர்.
அதுவே அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்றும் அவர் சொன்னார்.
இவ்வளவு நாள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள் ? உருப்படாத காரியம் செய்யவே உங்களுக்கு நேரம் போதவில்லை ! அது சரி, 90 மில்லியன் அதன் வேலையை சுறுசுறுப்பாக தொடங்கிவிட்டது. நீதிக் கோட்பாட்டை நிலைநிறுத்தப் போகிறார்களாம் ! (வெங்காயங்கள் )
முன்னொரு காலத்தில் மே 13 கலவரம் நடந்ததே! அதைக் கூட இப்போது தோண்டி எடுக்கலாம்! ஏதாவது ஆதாயம் கிடைக்காமலா போகும்!
வேண்டா மருமகள் என்ன செய்தாலும் மாமியாருக்கு பிடிக்காதே-என்ன செய்வது? பாராபட்சம் இல்லாத பாகுபாடு இல்லாத இன மதவெறி இல்லாத ஆட்சி இல்லாத வரைக்கும் -நாம் இது போன்ற” தோண்டல்கள்” நடக்கும். ஒன்றும் செய்யாமல் எல்லா சுக போகங்களையும் அனுபவித்ததின் பிரதிபளிப்பே இந்த நாதாரிகளின் செயல்கள். இது மாறப்போவது கிடையாது.காரணம் நம்முடைய கல்விமுறை இனபேதம் மதவெறி அரசியல் நடைமுறை.