பார்டி அமனா நெகாரா (அமனா) தலைவர் முகம்மட் சாபு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் கடுமையாகக் குறைகூறியவர்களில் ஒருவர். மெமாலிச் சம்பவம் தொடர்பாக அவர் மகாதிரை நிறையவே குறை கூறியுள்ளார்.
அவரிடம், பாஸ் அச்சம்பவம் தொடர்பில் மகாதிர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது குறித்து கருத்துரைக்குமாறு கேட்டதற்கு, தேர்தலுக்காக அவ்விவகாரம் கிளப்பி விடப்பட்டிருக்கிறது என்றும் மன்னிப்பு கேட்பதும் கேட்காததும் மகாதிரைப் பொறுத்தது என்றும் கூறினார்.
“அவரைப் பொறுத்தது. அதன் தொடர்பில் நான் கருத்துச் சொல்ல முடியாது”, என்றார்.
நிலவரத்தை அமைதிப்படுத்த மகாதிர் மன்னிப்பு கேட்பது சரியாக இருக்குமா என்று மீண்டும் அவரிடம் ,மகாதிர் “விவேகமிக்கவர்” என்றும் மெமாலிச் சம்பவம் ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒன்று என்றும் சொன்னார்.
“அமைதிப்படுத்த என்ன இருக்கிறது? அதுதான் தீர்ந்துபோன விவகாரமாயிற்றே”, என்றார்.
பொதுத் தேர்தல் வருவதால் அச்சம்பவம் குறித்து பேசப்படுவதாகக் கூறினார்.
“பொதுத் தேர்தல் வரும்போது இந்த விவகாரமும் தலைதூக்கும். தேர்தல் முடிந்ததும் இதுவும் மடிந்து போகும்”, என்றவர் சொன்னார்.