கடந்த 2015-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருள், சேவை வரி (ஜி.எஸ்.தி.), இன்னும் திறமையான முறையில் செயல்பட, அதன் பலவீனங்களை அரசாங்கம் மேம்படுத்தும், என 2-ஆம் நிதியமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார்.
ஜி.எஸ்.தி. செலுத்துவதைத் தவிர்க்க முயலும் வியாபாரிகளைக் கண்டறிந்து, அமலாக்க அம்சங்களை இறுக்கமாக்குவதும் முன்மொழியப்பட்ட மேம்பாடுகளில் ஒன்று என அவர் தெரிவித்தார்.
“நாங்கள் இத்திட்டத்தை மாற்றமாட்டோம். ஆனால், அரசாங்கத்துக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் நன்மையளிக்கும் வகையில், இன்னும் சிறப்பானதாக விளங்க, அதன் அமலாக்கத்தில் பல மேம்பாடுகளைச் செய்வோம்.”
“ஜி.எஸ்.தி. செலுத்துவதில் நாம் ஒரு முழுமையான அமலாக்கப் பணிகளைச் செய்ய வேண்டும். ஏனென்றால், சில வணிகர்கள் வரிப்பணம் செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இது வரி செலுத்தும் பிற வர்த்தகர்களுக்கும் பொது மக்களுக்கும் நியாயமானது அல்ல,” என, இன்று லெம்பா பந்தாய் அம்னோ பேராளர் மாநாட்டைத் திறந்து வைத்து பேசுகையில் அவர் தெரிவித்தார்.
14-வது பொதுத் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெற, ‘ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.தி. அகற்றப்படும்’ என ஜி.எஸ்.தி.-யை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் எதிர்க்கட்சியின் செயல் குறித்து கருத்துரைக்கையில் ஜொஹாரி இவ்வாறு கூறினார் என பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
கையூட்டு, ஊழல் போன்ற வேலைகளில்தான் அமைச்சர்களிலிருந்து, மேல்மட்ட-கீழ்மட்ட ஊழியர்கள்வரை திறமையான முறையில் செயல்படுகிறீர்கள். இவ்வகையில், உங்கள் ஊதியத்தைவிட அதிகமாகவே சம்பாதிக்கிறீர்கள். மக்களிடமிருந்து மேலும்மேலும் சுரண்டுவதைவிடுத்து உங்கள் அரசு இயந்திரத்தை சரிபடுத்துங்கள். எல்லாம் சரியாகிவிடும். GST தேவையில்லை !
ஜி.எஸ்.தி. செலுத்தாத வணிகர்களுக்கும் அமலாக்கப் பணிகளில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே “அம்னோ தரகர்கள்” நியமிக்கப்பட்டு படுஜோராக வசூல் நடைபெறுவது மக்களுக்கே தெரிந்திருக்கும்போது, உனக்கு தெரியவில்லையென்றால் நீ எல்லாம் என்னடா வெங்காய அமைச்சர்.