எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தல், அம்னோவினால் ஆதரிக்கப்படும் தேசிய முன்னணியின் எழுச்சி அல்லது வீழ்ச்சியை நிர்ணயிக்கும் ஒன்று என்பதால், புத்ரி அம்னோ உட்பட, அனைத்து அம்னோ உறுப்பினர்களும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் எனப் புத்ரி அம்னோ இயக்கத்தின் துணைத் தலைவர் ஷஹிடா ஷாரிக் கான் கூறியுள்ளார்.
இன்று, சபா, லாஹாட் டாத்து, சிலாம் தொகுதி புத்ரி அம்னோ பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப்பின் அவர் இவ்வாறு பேசினார்.
அம்னோ மற்றும் பாரிசான் நேசனல் சுலபமாக வெற்றிபெற்ற முந்தையக் காலங்கள் கடந்துவிட்டன. இப்போது அம்னோவும் பாரிசானும் பலதரப்பினரால், பல்வேறு திசைகளிலிருந்து தாக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
“இன்றைய மக்களின் கோரிக்கைகள் முன்புபோல் அல்ல, எல்லாம் மாறிவிட்டன. இன்றைய இளைஞர்களின் பார்வையும், முந்தையதிலிருந்து வித்தியாசப்படுகின்றன. வாக்காளர்களின் சிந்திக்கும் திறனும் செயலும் முற்றிலும் மாறிவிட்டன, சமூக ஊடகங்களின் வருகையால் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்,” என அவர் மேலும் பேசினார்.
எனவே, வாக்காளர்களின் குறிப்பாக, இளைஞர்களின் வாக்குகளை வென்றெடுக்க, புத்ரி உறுப்பினர்கள் புத்திசாலித்தனமாகவும் முதிர்ச்சியுடனும் இயங்க வேண்டும். வாக்காளர்களின் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளை விரைவாக அறிந்து செயல்படும் திறன் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நாட்டிலுள்ள சுமார் 400,000 புத்ரி உறுப்பினர்கள் எதிரிகளின் தாக்குதல்களைத் தகர்த்தெரியவும், கட்சியையும் அதன் தலைவரையும் பாதுகாக்கவும் முகவர்களாக, சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமென ஷஹிடா நிருபர்களிடம் கூறினார்.
–பெர்னாமா
அம்னோவின் எழுச்சி, வீழ்ச்சியை 14-வது பொதுத் தேர்தல் நிர்ணயிக்காது. மாறாக வரும் பொதுத் தேர்தலுக்கு முன் அம்னோவின் பிரச்சார வியூகம், நாட்டின் பொருளாதார நிலை, உணவுப்பொருள்களின் கட்டுக்கடங்கா விலையேற்றம், வெற்று வாக்குறுதிகள், ரிங்கிட்டின் நிலைத்தன்மை, பிற இனங்களின் பிரச்சினைகளை அம்னோ அணுகப்போகும் முறைகள் ஆகியவற்றோடு பொதுத் தேர்தலில் இவர்கள் போடப்போகும் வேஷம் (அது கலையும் விதம்) இவையும் சேர்ந்து அம்னோவின் தலையெழுத்தை மட்டும் அல்ல, கூட்டரசின் தலையெழுத்தையும் நிர்மாணிக்கும் என்பதே உண்மை. இனி நம்பிக்கை தும்பிக்கை பருப்பெல்லாம் வேகாது….
எழுச்சி எங்க இருக்கு? வீழ்ச்சிதான் வரப்போகுது!
அம்னோவில் லஞ்சம் தலைவிரித்து ஆடுது, அரங்க பணம் கைவைத்தால் இதை முதலில் திருத்துங்கள்
எனக்கு என்னமோ அம்னோ நாதாரிகள் தான் ஆட்சியை பிடிப்பான்கள்– நான் மகிழ்ச்சியுடன் நான் சொல்வது தவறு என்று ஏற்றுக்கொள்வேன்.-அப்படி நான் சொல்வது நடக்காவிட்டால்.
என்தாய்த்தமிழ், நானும் அப்படித்தான் நினைக்கிறேன். மலாய்க்காரர்களையும், இந்தியர்களையும் அப்படியெல்லாம் எளிதாக மாற்றிவிட முடியாது!
en thaai thamizh
அம்னோ நாதாரிகள் ஆட்சியை இழப்போம் என்று ஓட்டு எண்ணிக்கைக்கு முன்னரே தெரியவந்தால் உடனே நாட்டில் இனகலவரம்தான்.
அப்பன் அப்துல் ரசாக் இனக்கலவரத்தை தூண்டி விட்டதுபோல மகன் நஜிப் அப்துல் ரசாக் இனக்கலவரத்தை தூண்டிவிட சொல்லியா கொடுக்கணும்.