டிஏபி அதன் கட்சித் தலைமைக்கான தேர்தலை செப்டம்பர் 10-இல் நடத்த உத்தேசிக்கிறது. ஆனால் சங்கப் பதிவகமோ (ஆர்ஓஎஸ்) அதற்குமுன் சில விவங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறது.
டிஏபி உதவித் தலைவர் தெரேசா கொக் இதனைத் தெரிவித்தார். அவர் இன்று காலை ஆர்ஓஎஸ் தலைமை இயக்குனர் முகம்மட் ரஸின் அப்துல்லாவுடன் 90-நிமிடச் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
“நாங்கள் கட்சி மறுதேர்தலை இயன்ற விரைவில்- செப்டம்பர் 10இல்- நடத்த விரும்புவதாக தெரிவித்தோம். ஆனால் அந்த (ஆர்ஓஎஸ்) அதிகாரி சில விசயங்களைச் சரிபார்க்க வேண்டியிருப்பதாக கூறினார்.
ஆர்ஓஎஸ் கட்சிப் பேராளர் பட்டியலையும் இரண்டு டிஏபி கிளைகளின் ஆவணங்களையும் சரிபார்க்க விரும்புகிறது.
“நாங்கள் திரும்பிச் சென்று அவர்களுக்குத் தேவையான ஆவணங்களை வழங்குவோம், பேராளர் பட்டியலையும்- கட்சியிலிருந்து விலகியவர்கள், இறந்தவர்களின் பெயர்களையும் சேர்த்தே கொடுப்போம்.
“தலைமைச் செயலாளர் இவ்விவகாரம் குறித்து மற்ற அதிகாரிகளுடன் கலந்து பேச வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்”, என சீ பூத்தே எம்பியான தெரேசா கூறினார்.