டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக இருந்தபோது கெடாவில் நிகழ்ந்த மெமாலிச் சம்பவத்தை விசாரிப்பதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்க அரசாங்கம் தயாராக இருப்பதை பாஸ் வரவேற்கிறது.
அதேபோன்று 1எம்டிபிக்கும் ஒரு ஆர்சிஐ அமைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் கூறினார்.
ஆழமாக விசாரணை நடத்தி அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த அவ்விரு ஆர்சிஐகளும் தேவை என்றாரவர்.
“1985 மெமாலிச் சம்பவத்தை விசாரிக்க அரசாங்கம் ஆர்சிஐ அமைக்க ஆயத்தமாக உள்ளதை பாஸ் வரவேற்கிறது.
“அதே வேளையில் பாஸ் 2015-இலிருந்தே 1எம்டிபிமீது ஆர்சிஐ அமைக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வந்துள்ளதையும் நினைவுபடுத்த விரும்புகிறது”, என்று துவான் இப்ராகிம் கூறினார்.
மே 13 கலவரத்திற்கும் ஆர்சிஐ ஒன்று தேவை.