ரிம 2.6 பில்லியன் ‘நன்கொடை’, கேள்வி எழுப்பிய ரஃபிஷியைப் போலிஸ் விசாரித்தது

rafizi najibபிரதமர் நஜிப் ரஷாக்கின் சொந்த வங்கிக் கணக்கில் இருந்த 2.6 பில்லியன் ரிங்கிட் குறித்து, தனது வலைப்பதிவில் கருத்து தெரிவித்ததன் விழைவு, மக்கள் நீதி கட்சியின்  உதவித் தலைவர் ரஃபிஷி ரம்லி, இன்று டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் விளக்கமளிக்க அழைக்கப்பட்டார்.

சவுதி அரேபியா, மெக்காவில் மெட்ரோ ரெயில் திட்டத்தில் பிராசரானா மலேசியா பெர்ஹாட்டின் ஈடுபாடு தொடர்பாக அவ்வலைப்பதிவில் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், ‘நன்கொடை’ என்பது மலேசியர்கள் செலுத்திய வரி பணமே தவிர, சவூதி அரேபிய குடும்ப உறுப்பினர்கள் கொடுத்தது அல்ல என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

“நஜிப்பிற்கு இது உணர்ச்சிப்பூர்வமான விஷயம் என்பது எனக்குப் புரிகிறது. பிரதமரின் வங்கிக் கணக்கில் புகுந்த 2.6 பில்லியன் ரிங்கிட்டின் உண்மை கதையை மூடி மறைக்க, சவூதி அரச குடும்பத்தினரின் பேர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த இழப்பை மலேசியர்கள் எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்பதே என் கேள்வி,” என ரஃபிஷி இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

மக்கள் பணத்தைத் தன் சொந்த இலாபத்திற்கு எடுத்தது இல்லை, தவறாகப் பயன்படுத்தியது இல்லை என நஜிப் முன்பு கூறியிருந்தார்.

இன்று, போலிசாரின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாக ரஃபிஷி தெரிவித்தார். மேலும், விரைவில் தன்மீது குற்றம் சுமத்தப்படலாம் என்றும், “நீதிமன்றத்தில் என் மீது வலுவான வழக்கு இருக்கும் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்,” என்றும் அவர் கூறினார்.