சந்தேகத்துக்குரியவர்களை லாக்-அப் சட்டை அணிய வைத்து நீதிமன்றம் அழைத்து வருவதற்கு போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார்
அளித்த விளக்கத்தை மறுத்துரைத்தார் பாடாங் செராய் எம்பி என். சுரேந்திரன்.
போலீசார் சந்தேகத்துரியவர்களை செவ்வூதா நிற லாக்-அப் சட்டை அணியச் செய்து நீதிமன்றத்துக்கு அழைத்து வருவது வழக்கமான ஒன்றுதான் என்றும் அது அவர்களை சிவிலியன்களிலிருந்து பிரித்துக் காட்டும் என்றும் காலிட் கூறினார்.
ஆனால், அப்படிச் செய்வது போலீசார் அவர்களின் நடைமுறை விதிகளை(எஸ்ஓபி) அவர்களே மீறும் செயலாகும் என ஒரு வழக்குரைஞருமான சுரேந்திரன்.
“விசாரணைக்காக தடுப்பு வைக்கப்பட்டோரை லாக்-அப் சட்டையில் நீதிமன்றத்துக்கு அழைத்துவருவதைத் தடுக்கும் புக்கிட் அமானின் எஸ்ஓபியை ஐஜிபி-யே அறியாமலிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்றவர் சொன்னார்.
அந்த எஸ்ஓபி, 2014 ஜூலை முதல் நாள் வெளியிடப்பட்ட “Prosedur Kualiti Pengurusan Lokap” என்பதில் உள்ளதாக அவர் கூறினார்.
அந்த வகையில் போலீசார் அவர்களின் விதிமுறைகளை அவர்களே மீறுகிறார்கள்.
1953ஆம் ஆண்டு லாக்-அப் விதிகளும் சந்தேகத்துக்குரியவர்களை லாக்-அப் சட்டையில் நீதிமன்றத்துக்கு அழைத்துவரும் அதிகாரத்தை போலீசுக்குக் கொடுக்கவில்லை என்று பிகேஆர் உதவித் தலைவர் கூறினார்.