இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், அதிகாரப்பூர்வ இரகசிய சட்ட(ஓஎஸ்ஏ)க் குற்றச்சாட்டில் பாண்டான் எம்பி ரபிசி ரம்லி குற்றவாளிதான் என்பதையும் அவருக்கு கொடுக்கப்பட்ட 18மாதச் சிறைத்தண்டனையையும் நிலைநிறுத்தியது.
அதேவேளை, நீதிபதி அஸ்மான் அப்துல்லா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரபிசிமீது சுமத்தப்பட்ட இரண்டாவாது ஓஎஸ்ஏ குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்தார்.
பிகேஆர் உதவித் தலைவருமான ரபிசி மேல்முறையீடு செய்வதற்கு இடமளித்து தண்டனையையும் அவர் நிறுத்தி வைத்தார்.
முன்னதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரபிசிமீது இரண்டு ஓஎஸ்ஏ குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இரண்டிலும் அவர் குற்றவாளியே என்று தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 18மாதச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையின் உள்ளடக்கத்தை வெளியிட்டார் என்பது ரபிசிமீதான குற்றச்சாட்டு. அந்த ஆவணத்தை வைத்திருந்தார் என்ற மற்றொரு குற்றச்சாட்டில் அவர் விடுவிக்கப்பட்டார்.