மெமாலி சம்பவத்தில் முதலில் தாக்கப்பட்டது போலிஸ்காரர்களே என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிராமவாசிகள் போலிஸ்காரர்களை மறைந்திருந்து தாக்கியதாகவும், அத்தாக்குதலில் சார்ஜன் ஒருவரும் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இறந்ததோடு, இன்னொரு கான்ஸ்டபல் படுகாயம் அடைந்ததாக அச்சமயத்தில் இடைக்காலப் பிரதமராக இருந்த முசா ஹீத்தாம், சம்பவம் நடந்து முடிந்த மறுநாள் ஆற்றிய உரையை மேற்கோள்காட்டி மகாதீர் பேசினார்.
“முதலில் கொல்லப்பட்டது போலிஸ்காரர்கள்தான் என்பது அவர் உரையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
32 ஆண்டுகளுக்கு முன்னர், 18 உயிர்களைக் கொன்ற அச்சம்பவம் தொடர்பான அரச ஆணைக்குழு விசாரணையை (ஆர்சிஐ) தாம் வரவேற்பதாக, பெர்சத்து கட்சியின் தலைவருமான அவர் தெரிவித்தார்.
அந்தக் காலகட்டத்தில் பிரதமராக இருந்த அவரிடம் அச்சம்பவம் தொடர்பான சில ஆதாரங்கள், அறிக்கைகள் மற்றும் கதைகள் உள்ளதால், ஆர்சிஐ தகவல் திரட்டி, கூட்டம் போடத் தேவையின்றி, முடிவெடுக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
“அதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட நபர்களும் அடங்குவர்,” என்றும் அவர் தனது வலைப்பதிவு இடுகையில் குறிப்பிட்டுள்ளார்.
அதே வலைப்பதிவில், மெமாலி சம்பவத்துடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்த ஹாடி ஆவாங் பற்றியும் மகாதீர் எழுதியிருக்கிறார்.
“இந்த உத்தரவு (அமானாட்), அரசாங்கத்திற்கு எதிரான ‘ஜிகாத்’ எனும் போராட்டத்தை ஊக்குவிக்கிறது. இப்போரில் போராளிகளின் இறப்பு ஒரு தியாகமாகும்,” என்று ஹஜி அவாங் 1981, ஏப்ரல் 7-ல், திரெங்கானுவில் பேசியதாக மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்வில் நடந்த அசம்பாவிதத்திற்குப் பிறகு, மெமாலி சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மெமாலி தொடர்பான மகாதீரின் பதிலில் அதிருப்த்தியடைந்த பார்வையாளர்கள் அவ்வாறு நடந்துகொண்டனர் என்று ஹாடி கருத்து தெரிவித்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, “கோரிக்கைகள் இருந்தால் மெமலி சம்பவத்தை விசாரிக்க, அரசாங்கம் ஆர்.சி.ஐ.-யை நிறுவத் தயாராக உள்ளது,” என்று துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி அறிவித்திருந்தார்.
இந்த ஆர்.சி.ஐ. அமைக்கப்பட்டால், மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் நடந்த ஊழல்கள் அல்லது சம்பவங்களை விசாரிப்பதற்கு, இவ்வாண்டு அமைக்கப்பட்ட இரண்டாவது கமிஷன் இதுவாகும்.
இதற்கிடையே, புத்ராஜெயாவிற்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்ததாலும், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து இறங்க வலியுறுத்தியதாலும்தான், மகாதீருக்கு எதிராக இத்தனை கெடுபுடிகள் எனப் பெர்சத்து கட்சி அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியது.
இந்திய வம்சாவளி மலாய்க்காரரான மகாதீரே,
அன்று மெமாலி சம்பவத்தில் முதலில் இறந்தது போலிஸ்காரர்கள் அதனால் நடவடிக்கை எடுத்தேன் என்கிறீரகள்.
+++ அதுவும் நியாயம்தான் +++
இன்று உள்துறை அமைச்சரும் இந்தோனேசிய வம்சாவளி மலாய்க்காரரான ஹமிடி அரச ஆணைக்குழு விசாரணை அமைப்போம் என்று கூறுவதை பார்த்தால்,
காவல் துறையில் பணி புரிபவர்களின் உயிர் முக்கியமல்ல,
ஜிகாத் போராளிகள் பெயரில் உலாவும் பயங்கரவாதிகளின் உயிர்தான் முக்கியம் என்று கருதுகிறார்.
அதனால் இந்தோனேசிய வம்சாவளி மலாய்க்காரரான ஹமிடி காவல் துறையில் பணி புரிபவர்கள்தான் பயங்கரவாதிகள் கொல்ல பட வேண்டியவர்கள் என்றும், ஜிகாத் போராளிகள் பெயரில் போராடுபவர்கள், காவல்துறை பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைகாப்பாற்றுபவர்களாக சித்தரித்து விட்டார்.
+++ இதுவும் நியாயம்தான் +++
எது எப்படியோ இனி காவல் துறையில் பணி புரிபவர்களின் உயிர் ஊம்பிதானோ ?
மெமாலி சம்பவம் குறித்து ஆர்.சி.ஐ.அமைக்கப்படடால் அந்த சம்பவத்துக்கு காரணமாக இருந்த ‘இப்ராஹிம் லிபியா’ போன்ற தீவிரவாதிகள் மற்றும் இங்குள்ள ஐஸ் போன்ற தீவிரவாத அமைப்பை ஆதரிப்பவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிடும்.30 வருடங்களுக்கு முன் குழி தோண்டி புதைக்கப்பட்ட இந்த ‘பிணத்தை’ மீண்டும் தோண்டியெடுத்து இந்த நாட்டை நாறடிப்பானேன்?