அம்னோ உள்பட, பெரும்பாலான பிஎன் கட்சிகள் 14ஆம் பொதுத் தேர்தலுக்கான அவற்றின் வேட்பாளர் பட்டியலைச் சமர்ப்பித்து விட்டதாக பிஎன் துணைத் தலைவரும் துணைப்பிரதமருமான அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
வேட்பாளர்களை ஆய்ந்து தேர்ந்தெடுக்க அம்னோவும் பிஎன்னும் ஒரு தனிக் குழுவை அமைத்திருப்பதாக அவரை மேற்கோள்காட்டி த ஸ்டார் கூறியது.
எனினும், வேட்பாளர்கள்களைத் தேர்ந்தெடுப்பதில் இறுதி முடிவு செய்யப்போகின்றவர் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்தான்.
“டத்தோஸ்ரீ நஜிப்தான் அதை முடிவு செய்வார்.
“இந்தத் தடவை களமிறங்கும் அம்னோ பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும்”,, எனவும் துணைப் பிரதமர் ஸ்டாரிடம் தெரிவித்தார்.
நாட்டு பிரதாமரைவிட , துணைப்பிரதமரே தற்போது அனைத்து விபரங்கள் , சூழ்நிலைகளிலும் முதல்வராக செயல்படுகிறார் , செயல்பாடுகளை பார்க்கும்போது நாட்டு ஒன்றாம் பதவிக்கு குறிவைக்கிறார் என்பது தெளிவாக புலப்படுகிறது . பொறுத்திருந்து பார்ப்போம் .
பெரும்பாலான கொள்ளையர்கள் தங்கள் கொள்ளையர் வேட்பாளர் பட்டியலைக் கொடுத்து விட்டன.
அதில் சிறந்த கொள்ளையரை ஹமிடி தேர்வு செய்தாலும்,
நஜிப்தான் சிறந்த கொள்ளையரா இல்லையா என்பதை முடிவு செய்வாராம்.
அதுவும் சரிதான். நஜிப்தான் இதில் பழுத்த அனுபவசாலியாயிற்றே.
தேர்தல் எப்பொழுது ?
தேர்தல் உங்களுக்கு பாடம் புகுத்தும் நேரம்.