தம்முடைய உடல்நலன் குறித்து யாரும் கவலைகொள்ள வேண்டியதில்லை என்று கூறிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தம் எதிரிகள்தான் தாம் சாவதைக் காண பெரிதும் விரும்புகிறார்கள் என்றார்.
“நான் நன்றாகத்தான் இருக்கிறேன். கடுமையான நோயில் அடிபட்டு மீண்டு வந்ததுபோலவா தோற்றமளிக்கிறேன்?
“நான் சாவதைப் பலர் விரும்புகிறார்கள். நான் இருப்பது அவர்களுக்குத் தொல்லை என்றும் நாட்டுக்கு ஆபத்து என்றும் நினைக்கிறார்கள்”, என இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் மகாதிர் தெரிவித்தார்.
மகாதிர் சுவாசிக்க சிரமப்படுவதாகவும் அதனால் மருத்துவ மனையில் தீவிர கவனிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் வலம்வரும் ஒரு செய்திக்கு எதிர்வினையாக மகாதிர் இவ்வாறு கூறினார்.
ஆனாலும் , அண்மையில்தான் 92வது பிறந்த நாளைக் கொண்டாடிய மகாதிரின் உடல்நலன் குறித்து அவர் தலைமை ஏற்றுள்ள பக்கத்தான் ஹராபான் கூட்டணியின் ஆதரவாளர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள்
மகாதிருக்கு இருதயக் கோளாறு உண்டு. 1989 -இலும் பின்னர் 2007-இல் மீண்டும் அவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த ஆண்டில் இருதய சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிலர் என்றால் பரவாயில்லை.பலரும் நீர் சாக விரும்புகிறார்கள் என்றால்,உன் நோக்கமும் செயலும் சரியில்லை என்றுதான் அர்த்தம்.