அடுத்த பொதுத் தேர்தலில் சிலாங்கூரின் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 42-இல் பாஸ் போட்டியிடும் என அற்ஃபிவிக்கப்பட்டுள்ளது.
பிகேஆர் தலைவர்கள் பாஸுடன் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ள முயன்று வரும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
“சிலாங்கூர் பாஸ் அடுத்த பொதுத் தேர்தலில் பல்முனை போட்டிக்குத் தயாராக உள்ளது. பிஎன் அல்லது பக்கத்தான் ஹராபானை எதிர்த்து எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம்”, என சிலாங்கூர் பாஸ் ஆணையர் சாலேஹென் முக்யி இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
கட்சி திரட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 42 இடங்களில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாரவர்.
மார்ச் மாதம், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், அக்கட்சி 40 நாடாளுமன்ற இடங்களை வெற்றிகொள்வதுடன் கிளந்தான், கெடா, பேராக், திரெங்கானு, சிலாங்கூர் ஆகியவற்றையும் கைப்பற்ற இலக்குக் கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.
2013 பொதுத் தேர்தலில் பாஸ் சிலாங்கூரில் 21 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களைப் பெற்றது.
பிகேஆர் வென்றது 14 இடங்களில்தான். ஆனாலும் பாஸும் மற்ற பக்கத்தான் ரக்யாட் பங்காளிகளும் மாநில ஆட்சிப் பொறுப்பை பிகேஆரிடமே ஒப்படைத்தன.
அத்தனை இடத்திலும் தோற்பார்கள் என்று தெரிந்தே போட்டியிடுகின்றனர் போலும். அப்படியே நடக்கட்டும்.
போட்டியிடுவது உங்களது உறிமை. யாருக்கு வாக்களிப்பது மக்கள் உறிமை. கடந்த காலம் தற்பொழுது இல்லை.
இருக்கும் இடத்தை விட்டு இல்லா இடத்தை தேடி அலையும் பாஸ்
அத்துணை இடத்திலும் அவன் தோற்பான்