மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் மன்னிப்பு கோருவதற்கு அவருக்கு 48 மணி நேர அவகாசம் கொடுத்துள்ளது. மன்னிப்பு கோரத் தவறினால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது மேலும் கூறியது.
நேற்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவை “சட்ட விரோதாமாக” எம்எசிசி கைது செய்தது என்று குவான் எங் அதன் மீது குற்றம் சுமத்தினார்.
“சட்ட விரோதமாக கைது செய்தது” என்று கூறப்பட்டதை எம்எசிசி கடுமையாகக் கருதுகிறது. அது எம்எசிசியின் பெயருக்கும் கீர்த்திக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டிருக்கிறது என்று எம்எசிசி இன்று மாலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறது.
ஆகஸ்ட் 10 இல் பீ கைது செய்யப்பட்டார். எம்எசிசி அவரை ஆகஸ்ட் 12 லிருந்து ஐந்து நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், பினாங்கு உயர்நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்டது.
பீ யை விடுவிக்க உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் அவர் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்று கூறப்படவில்லை என்று எம்எசிசி கூறியதோடு அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதால், அது குறித்து தெரிவிக்கப்படும் எந்தக் கருத்தும் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று அது மேலும் கூறிற்று.
மன்னிப்பு கேட்டால், கட்சிக்கு மகா கேவலம். போதுமான அளவுக்கு மேலேயே சொத்து சேர்த்தாகிவிட்டது. கட்சிக்கு மேலும் கேவலத்தை உண்டு பண்ணாமல், மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருக்க வேண்டியதுதானே! பாதி விலைக்கு பங்களா வாங்கி, அதற்கு மாற்றாக வேறொரு துண்டு நிலத்தை தாரை வார்த்த வழக்கே இன்னும் முடியவில்லை. அதற்குள் வேறொன்றா?
தேவைகளை ஆசையாக்கிக் கொண்டால் வாழ்வு வளம் பெறும். ஆசைகளைத் தேவையாக்கிக் கொண்டால் வாழ்வு வழுக்கி விடும். மலேசிய அரசியல் வாதிகள் இரண்டாம் தரம் .காரணம் மக்களின் ஏமாளித்தனம். அரசியல்வாதிகளின் பண வேட்டை தொடர்கிறது,தலைவர் எவ்வழி தொண்டரும் அவ்வழி.
யாருடா இவன் அயோக்கியன் உலக உண்மையா கண்டு பிடிச்சிட்ட்ரு
அறிவாளிகளா பின் அரசாங்க தலைவர்கள் எவ்வளவு சுருட்டிர்கார்கள் என்று கொஞ்சம் கவனியுங்கள் .