பாஸ் கட்சி ஏற்கனவே 1எம்டிபிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதை “வெளியார் தலையீடு” என்று வருணித்துள்ளதை அறிவோம். இப்போது பாஸ் தலைவர்களில் ஒருவர் அந்த இஸ்லாமியக் கட்சியின் பெயரைக் கெடுப்பதற்கு அனைத்துலக அளவில் சதி செய்யப்படுவதாகக் கூறுகிறார்.
இச்சதித் திட்டமே தம் கட்சி அம்னோவுடன் ஒத்துழைத்து சிலாங்கூரைக் கைப்பற்ற திட்டமிட்டு வருவதாகக் கூறும் செய்திக்கும் காரணமாக இருக்கலாம் என பாஸின் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்கண்டர் ஏ.சமட் கூறினார்.
“அச்செய்தியை பாஸின் பிம்பத்தைக் கெடுக்கும் முயற்சியாகத்தான் கருத வேண்டும்.
“அது அடிப்படையற்ற ஒரு வதந்தி.
“அது பாஸை உள்ளும் புறமும் தாக்கும் அனைத்துலகச் சதியாகக்கூட இருக்கலாம், (லண்டனிலிருந்து செயல்படும் சரவாக் ரிப்போர்ட்போல”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
பாஸ் கோட்டைக்குள்ஓட்டைப்போடுது Ph
கட்சிகள்!
பாஸ் கட்சி சற்று இறங்கி வரவேண்டும். பக்கத்தானும் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும். இவ்விரு ஜாம்பவான்களும் ஒன்று சேரா விட்டால், பாரிசானை கவிழ்க்க முடியாது.
PAS நாதாரிகளை என்றுமே நம்பமுடியாது. அம்னோ நாதாரிகளே இப்படி இருக்கும் போது PAS எப்படி இருக்கும்– ஏறிய ஏணியை உதைத்து விடுவான்கள்.