பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பிஎன் “இரட்டை நியாயங்களைப் பின்பற்றுவதாக” சாடியுள்ளார். அதன் அமைச்சர்களில் ஒருவர் முதலமைச்சர் அரசு நிறுவனங்களுக்குத் தலைவராக இருக்கக்கூடாது என்று கூறியதை அடுத்து லிம் அவ்வாறு சாடினார்.
முந்தைய பிஎன் மாநில அரசுதான் குறிப்பிட்ட அரசு நிறுவனங்களுக்கு முதலமைச்சர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி வைத்திருக்கிறது என்றாரவர்.
“மேலும், பிஎன் மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள் மற்ற மாநிலங்களில் அரசு நிறுவனங்களுக்குத் தலைவர்களாக இருக்கையில் பினாங்கில் அது கூடாதா?”, என்றும் லிம் ஓர் அறிக்கையில் வினவினார்.
பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் முதலமைச்சர் அரசு நிறுவனங்களை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று கூறியது குறித்துக் கருத்துரைத்தபோது லிம் இவ்வாறு கூறினார்.
பினாங்கு வேண்டாத மருமகள்.- தொட்டது எல்லாம் தவறு.
இதுக்கு நம்ம ‘சீயம்’ கர்ஜிக்குமா பார்க்கலாம்…