மலேசியா சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டின் 14 ஆவது பொதுத்தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். ஆனால், மலேசியக் குடிமக்களாகிய இந்தியர்கள், குறிப்பாக வறுமைப்பிடியில் சிக்கியிருக்கும் 40 விழுக்காட்டு இந்தியர்கள் (B40) அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இரத்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர். அம்னோவின் தலைமையிலான பாரிசான் நேசனல் அரசாங்கம் அக்கூட்டணியின் பங்காளியான மஇகாவின் வழி இந்தியச் சமூகத்திற்கு உதவுவதற்கு என்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தலைவிரித்தாடும் இலஞ்ச ஊழல்களால் தோல்வியடைந்து விட்டன. இந்நிலை மாற்றப்பட வேண்டும். இந்தியர்களின் இரத்தக் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். புத்ரா ஜெயாவைப் பிடிப்போம், இந்தியர்களின் இரத்தக் கண்ணீரைத் துடைப்போம் என்று பெட்டாலிங் ஜெயா ஆர்மடா ஹோட்டலில் இன்று காலை மணி 9 லிருந்து மாலை மணி 5 வரையில் நடைபெற்ற மலேசிய இந்தியர்களின் சிக்கல்கள் மீதான தேசிய ஆலோசனை கூட்டத்தில் முழங்கப்பட்டது
இன்று காலை தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சுமார் 120 க்கு மேற்பட்ட ஹரப்பான் கூட்டணியின் பங்காளித்துவக் கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்களில் டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன், ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா, முன்னாள் செனட்டர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் தெலுக் இந்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் ஆகியோரும் அடங்குவர்.
முன்னாள் செலயாங் நகராட்சி மன்ற உறுப்பினர் குணராஜ் தலைமை ஏற்றிருந்த இந்த நிகழ்ச்சியை வழக்குரைஞர் கா. ஆறுமுகம் வழிநடத்தினார்.
“இந்தியர்களின் பிரச்சனைகள் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியர்கள் மற்றும் ஓராங் அஸ்லிகள் போன்ற சமூகங்களின் பிரச்சனைகளைக் கையாள்வதற்கு ஏஜென்சி முறை பயன்படுத்தப்படுகிறது என்று இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்த சார்ல்ஸ் சந்தியாகு , அது போதுமானதல்ல என்று கூறினார்.
“இந்தியர்களின் வறுமை நிலை விவகாரத்தில் அரசாங்கம் நேரடியாக அதுவும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று சார்ல்ஸ் வலியுறுத்தினார்.
இந்தியர்களின் மருத்துவ தேவைகள் பற்றி குறிப்பிட்ட சேவியர், அவர்களுக்கு போதுமான சேவை அளிக்கப்படவில்லை என்பதோடு நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்றார். முதியவர்கள் கைவிடப்பட்டுள்ளனர். ஒற்றைத் தாய்மார்கள், பதினாறே வயதானவர்கள் உட்பட, கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு அரசாங்கம் உதவி அளிக்க வேண்டும். அந்த உதவி அவர்களுக்கு நேரடியாக அளிக்கப்பட வேண்டும் என்று சேவியர் மேலும் கூறினார்.
இளைஞர்கள் குற்றச்செயல்களின் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களை ஒதுக்கித்தள்ளி விடுவது விவேகமான செயல் அல்ல என்றும் அவர்களை முறையாகக் கையாள வேண்டும் என்றும் கருத்துரைத்த சேவியர், அதற்கு ஒரு திட்டம் தேவைப்படுகிறது என்றார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா, மஇகா-அம்னோ உறவினால் ஏற்றப்படப் போவது ஒன்றுமில்லை, ஏனென்றால் இந்தியர்களின் பிரச்சனைக்குத் தீர்வு அம்னோவிடமிருந்து வரப்போவதில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்தியர்களின் பிரச்சனைகளை பிஎன் ஒப்புக்கொள்கிறது. மஇகாவிடம் பணம் கொடுப்பதால் எதையும் தீர்த்துவிட முடியாது. அரசாங்கம் நேரடியாக தீவிரமாக தலையிட வேண்டும். இல்லையென்றால், பி40 விவகாரம் இன்னும் மோசமாகும் என்று சார்ல்ஸ் எச்சரிக்கை விடுத்தார்.
யார் செய்வது?
செய்தியாளர்களுடனான இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்தும் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்ததே. பாரிசான் அரசாங்கம் இப்பிரச்சனைகளைத் தீர்க்கப் போவதில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். தீர்க்கப் போவது யார் என்ற கேள்விக்குப் பதில் அளித்த சேவியர், ‘புத்ரா ஜெயாவை நாம் கைப்பற்ற வேண்டும்”, என்றார்.
இந்தியர்களின் வறுமை உற்பத்தி செய்யப்பட்டது
தொடர்ந்து நடைபெற்ற மலேசிய இந்தியர்களின் சிக்கல்கள் மீதான தேசிய ஆலோசனை கூட்டத்தில். “வறுமையை உற்பத்தி செய்தல்: மலேசிய இந்தியர்களின் 60 ஆண்டுகால அனுபவம்” பற்றி ராமா ராமநாதன் மலேசிய இந்தியர்கள் பெருந்திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள புள்ளிவிபரங்களைப் பட்டியலிட்டு இந்தியர்களின் வறுமை எப்படி உற்பத்தி செய்யப்பட்டது என்பதை விளக்கினார்.
இந்தியர்களின் வறுமையைத் தோற்றுவிக்கும் எடுத்துக்காட்டமைப்பு விளக்கம் என்ற தலைப்பில் டாக்டர் முகமட் அப்துல் காலிட் உரையாற்றினார்.
அடுத்து, டாக்டர் டோரிஸ் செல்வரெத்தனம் “இந்தியக் குடும்பத்தின் உருமாற்றம்” குறித்து பேசினார்.
மேற்கூறப்பட்டுள்ள உரைகளைத் தொடர்ந்து, “எதிர்காலத்தை எதிர்பார்த்தல்” என்ற தலைப்பில் டாக்டர் தாதாச்சாயினி கன்னனாது, டாக்டர் வோங் சின் ஹுவாட் மற்றும் குமார் மேனன் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மூன்று குழுக்களாப் பிரிக்கப்பட்டு, கீழ்க்கண்ட மூன்று கருப்பொருள்கள் மீது விவாதம் செய்து தங்களுடையக் கருத்தை முன்வைத்தனர்:
– 1. இந்தியக் குடும்பங்களின் உருமாற்றம் – முன்னேற்றத்திற்கான வழி
– 2. நெருக்கடியில் இந்திய இளைஞர்கள், கல்வியின் பங்கு மற்றும் வேலை மற்றும் வணிகம் ஆகியவற்றுக்கான வழிகள் – படைப்பு: ஜனார்த்தனி ஆறுமுகம்
– 3. எதிர்காலத்தை எதிர்பார்த்தல்.
இதில் பங்கேற்றவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களுடையக் கருத்துகளை முன்வைத்தனர்.
உரிமைக்காக போராடுவேன்
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் உரையாற்றிய பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II பி. இராமசாமி, உரிமைக்காக போராட வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினார். “நான் எனது உரிமைக்காகப் போராடுவேன். நான் யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல”, என்று கூறி அவர் நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.
அறுபதாண்டு காலமாக இந்நாட்டில் தமிழ் இனம் ஒன்று இருப்பது தேர்தல் சமயத்தில் தான் ‘அவன்’களுக்கு தெரிய வரும் என்று நினைத்திருந்தேன். ஐயா ‘நம்மவர்’களே…உங்களுக்கும் அது பொருந்தும் போல் தெரிகிறதே…ரொம்ப வேண்டாம் சமுதாயத்துக்கு தன்னால் இயன்றதை செய்து கொண்டிருந்த சேவியரை கீழே தள்ளிவிட்டு மேலே வந்த கணபதி ராவ் இன்னும் இருக்கிறாரா? அல்லது ஏதாவது ‘சுனாமி’ அவரை வேறேதேனும் கட்சிக்கு கொண்டுபோய்விட்டதா? இப்படிப்பட்ட கையாலாகா தலைவர்களின் அக்கறையின்மையால் தான் எதிரணியின் மேல் நமக்கு அனுதாம் குறைகிறது…இதை முதலில் களையுங்கள். வரும் பொதுத் தேர்தலில் வாக்குக்காக என்னை அணுகுவோரிடம் – அது எதிரணியோ அல்லது ஆளும் அணியோ- நான் கடந்த 5-ஆண்டுகளில் சமுதாயத்தில் உள்ள எத்தனை துரு பிடித்த ஆணிகளை பிடுங்கினீர்கள்? அல்லது எத்தனை புது ஆணிகளை அடித்தீர்கள்? எத்தனை பேரின் அடையாளக்கார்டு, பிறந்த சூறா பிரச்சினைகளை தீர்த்தீர்கள்? எத்தனை பேரை வேறு மதத்துக்கு மாற்றினீர்கள்? எத்தனை பேருக்கு உயர்கல்வி சீட் வாங்கித் தந்தீர்கள்? எத்தனை கோயில்களை உடைக்க உடந்தையாக இருந்தீர்கள்? எத்தனை வள்ளுவர் சிலைகளை முக்காட்டுத் துணி போட்டு மூடினீர்கள்? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் என்னிடம் உள்ளன. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் ஓட்டுக்காக என்னை அணுக வேண்டாம். என் குடும்பத்தில் மொத்தம் 7- ஒட்டுகள் உள்ளன. நான் சொன்னால் சொன்னபடி கேட்டு ஓட்டு போட என் உறவினர்கள் 120-உள்ளனர். என் கம்பத்தில் 45-பேர் உள்ளனர். எனவே எங்கள் தொகுதியின் வெற்றி தோல்விகளை எங்களால் நிர்ணயிக்க முடியும். எங்களின் பலம் எங்களுக்குத் தெரியும்…
எதிர் காட்சிகள் புத்ராஜெயாவை பிடிப்பது சந்தேகமே- அவ்வளவு தில்லு முள்ளுகள் நடக்கும். அப்படி பிடித்தாலும் அதில் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? பொதுவாக எல்லோரும் பாகுபாடு இல்லாமல் நடத்தப்பட்டு திறமை திறன் வழி நடத்தப்பட்டால் நாம் வரவேற்கலாம்– ஆனால் இனம் மதம் -முன் நிறுத்தப்படும் என் கணிப்பு. முன்பு துன் தான் சியூ சின் -இரண்டாம் உலக போரின் போது இந்தியாவுக்கு ஓடி அடைக்கலம் தேடி இருந்தாலும் நம் ரப்பர் தோட்ட தொழிலாளிகளை கேவலமாக பேசியதும் உண்மை. ஆதலின் நாம் எல்லா நேரங்களிலும் சிறிது கவனத்துடன் ஒற்றுமையுடன் இருப்பதே சால சிறந்தது.
நவீன் பாரதி! நல்ல கருத்து. நல்லா பேசக் கத்துக்கிட்டாங்க, எதிர்தரப்பு சூரப்புலிகள். வெங்காயத் தோழர்களே, சிலாங்கூர் மாநிலத்தை பி.கே. ஆரிடமும், பினாங்கை டி.ஏ.பி. இடமும் இரண்டு தவணைகளாக மக்கள் கொடுத்தார்கள். தற்போது இவர்கள் கூட்டம் போட்டு ‘அறுத்த’ வற்றை இந்த மாநிலங்களில் இவர்கள் தாராளமாக செய்திருக்கலாம். ஏன் செய்யவில்லை? {எவனாவது கேள்வி கேட்டுட போறான், இப்போதே அதற்கான பதிலை தயார் படுத்திக்க கொள்ளுங்கள், வெங்காயத் தோழர்களே}
1. எங்கேப் பிடிப்பது; நாம் நம்முடைய வாக்கு வங்கியை தேசிய அளவில் வலுப்படுத்தியிருக்கோமா? அதுவும் இந்த 60 ஆண்டுகளில்; வாக்குச் சீட்டின் அருமைத் தெரியாத நமக்கு அதன் ஆற்றலும் மரியாதையும் தெரியாத நமக்கு, வாக்காளர்களாக பதிவுச் செய்துக் கொள்ளுங்களென்றால், கொஞ்சமும் சம்பந்தமுமில்லாமல், எதுவும் விளங்காமல் ம இ க வை தேவையில்லாமல் உள்ளே இழுத்து ம இ க எங்களுக்கு என்னச் செய்தானென்று இன்றைக்கும் கேட்க்கின்றார்களே! ஏன்? நாம் பிறந்தால் பிறப்புப் பத்திரம் எவ்வளவு முக்கியமோ , 12 வயதானால் அடையாளச் சீட்டை எவ்வளவு முக்கியமோ அதேப் போன்றுதான் வயது 21 அடைந்து விட்டால் வாக்காளர்களாக பதிவுச் செய்துக் கொள்ள வேண்டுமென்ற முக்கியமும். இதையெல்லாம் காலத்தோடு ஒழுங்காக செய்திருந்தால் இன்றைக்கு நாம் இவ்வளவு சிரமங்களை, வேதனைகளை எதிர்நோக்கியிருக்க மாட்டோம். ஒரு மந்திரியே நம்மைப் பார்த்து துணிஞ்சிச் சொல்கின்றான்; ” உங்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை, நாங்கள் தன்னந் தனியாகவே பொதுத் தேர்தலில் நின்று வெற்றிப் பெறுவோம்” என்று வெளிப் படையாகப் பேசுகின்றான். கடந்தக் காலங்களில் மலாய்க்காரர்கல்லாதார் சுதந்திரத்திற்கு முன்பு நாட்டிற்கு பெரும் மிரட்டலாக விளங்கிய கமினூச பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கும், நாடு சுதந்திரம் பெறுவதற்கு நம் மக்கள் நடத்திய போராட்டதையும் இவர்கள் மறந்து விட்டார்கள் போல் தெரிகின்றது; இல்லையென்றால் இவர்கள் இன்று மந்திரிப் பதவியின் சுகத்தை அனுபவிக்க முடியுமோ! 2. நம் சமுக நலன் கருதி ம இ க வும் இது நாள் வரை இந்த வாக்கு வங்கி விஷயத்தில் கொஞ்சமும் அக்கறைக் கொள்ளவில்லை; இதை மட்டும் அவர்கள் ஒழுங்காக செய்திருந்தால் இன்றைக்கு நம் மக்களின் நிலைப் பாடே வேறாக இருந்திருக்கும்; வாக்கு சீட்டு வலிமை மட்டும் நமக்கு இருந்திருந்தால், நாம் எல்லாவற்றிற்கும் ம இ க வை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது; வாக்குச் சீட்டென்பது நமக்கொரு பாதுகாப்பான வேலி; தோட்டக்காரனுக்கு தோட்டவேலி எவ்வளவு முக்கியமோ, அதேப் போன்றுதான் நம் பாதுகாப்பிற்கு தேசியளவில் வலிமையான வாக்கு வங்கி அவ்வளவு முக்கியம்; இதை ஏன் இன்றையளவிலும் நாம் இன்னும் உணராமலிருக்கின்றோம்; வெறும் போராட்டங்கள் நடத்துவதால் மட்டும் நம் நிறைவாக எதையும் சாதித்து விட முடியாது. அந்தப் போராட்டத்திற்கு ஒரு மரியாதை வேண்டும். ம இ க
வை இனிமேல் கண் மூடித்தனமாக நாம் நம்புவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை; இனிமேலாவது நாம் மாறுவோமா? பதிவுப் பெறாதவர்கள் இனிமேலாவது வாக்காளர்களாக உடனே பதிவுச் செய்துக் கொள்வார்களென நம்புவோம்!.
கேட்க, படிக்க ….ஆகா….ஆகா…. என்ன சுகமாக இருக்கிறது! எங்களுக்குத் தேவை எல்லாம் எதிர்க்கட்சி மாநிலங்களில் எவ்வளவு இந்தியர்களுக்காக சாதித்திருக்கீறிர்கள் என்பது தான். வேறு விளக்குமாறு எல்லாம் தேவை இல்லை!
#இந்தியர்களின் இரத்தக் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்#
எதிர்கட்சிகள் ஆண்டு வரும் இரண்டு மாநிலங்களில் இந்தியரின் இரத்தக் கண்ணீர் எவ்வளவு துடைக்கப் பட்டிருக்கின்றது என்று ஒரு பட்டியலைக் காட்டுங்களேன்.
இந்தியர் கல்வி மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த எதிர்க்கட்சிகள் எப்பொழுதுமே ஒரு நீண்ட கால திட்டத்தை முன் வைத்ததில்லை. இன்னமும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எதிர்க்கட்சிகளின் சிந்தனையிலையே ஊறி அந்த வகையிலேயே நடுவண் அரசாங்கத்தைக் குறை கூறிக் கொண்டிருந்தால் ஆளுங் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் எவ்வொரு வித்தியாசமும் இல்லாமல் போய் விடும்.
இந்தியர்கள் முட்டடாள்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் தாப்பா நாடாளுமன்றத்தில் ம.இ.க. அணி எப்படி செயல்படுகின்றது என்று போய் பாருங்கள். அப்பவவாது எதிர்க்கட்சி இந்திய தலைவர்களுக்கு அறிவு பிறக்கின்றதா என்று பார்ப்போம்.
ம.இ.கா.வையே குறை சொல்லி அரசியல் நடத்துவதை எதிர்க்கட்சி இந்தியர்கள் கைவிட வேண்டும். ம.இ.கா. ஒரு செத்த பாம்பு. அதையே இன்னும் அடித்து நொறுக்கிக் கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை. குறிப்பாக பக்காத்தான் ஹராப்பானில் நமது நிலை மேலோங்க அங்கே துணிந்து குரல் எழுப்ப வேண்டும். அதைவிடுத்து, இக்கூட்டணியில் ஒரு தமிழன் இன்னொரு தமிழனை ஏறி மிதிக்க காத்துக்கிட்டுருக்கான். பி.கே.ஆறில் உள்ள இந்தியர்கள், 3 டீம். டி.ஏ.பி.யில் உள்ள இந்தியர்கள் 2 டீம். டி.ஏ.பி.யில் இந்தியர்கள் எத்தனை டீம்கள் இருந்தாலும், அங்குள்ள வாங்காளிகளின் சுண்டு விரலையும் அசைக்க முடியாத கோழைகள்.
கருத்து தெரிவித்த அனைவருக்கும் பாராட்டுதலும் நன்றியும் நவிழ்கிறேன்.நமக்குள் ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வதை விடுத்து நம் இனத்திற்கு எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வழியில் சுய நலமின்றி நடவடிக்கையில் இறங்குங்கள்.அரசியலில் உள்ளவர்கள் பொது நலத்துடன் செயல்பட்டால் இந்தியர்களின் வாழ்வு வளம்பெறும்.
இந்தபக்கம்,)Gst யும் விலைவாசியும் மக்களை
பிழிந்தெடுக்குது)அந்தப்பக்கம் போனாலும்
முட்டுது மொனகுது எந்தப்பக்கம் போவது?
கடலில் இரங்கி பெருங்காய்யம் கரைப்பது
போல் இனம் இருங்கு எந்தப்பக்கம் போவது
முடியலடா கண்ணா!
சுருக்கமாகச் சொல்லிக்கொள்ள விழைகிறேன். ஆளுங்கட்சி, எதிர்கட்சி, மூன்றாவதாக கழுதைக்கட்சி என்று ஒன்று வந்தால், என் தொகுதியில் நிற்கும் கழுதைக்கே என் ஓட்டு. பொதி சுமக்கவாவது உதவும் !
எந்தப்பக்கம் போவது தீரக்கமான முடிவை
சொல்லுஙகோ சாமிகளே!
சிலாங்குர், பினாங்கு மாநிலம் எதிர்கட்சியிடம் உள்ளது. பத்து ஆண்டு ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லேயே. முன்பு இருந்த ஆட்சியின் நிழல் வடிவம் தானே உள்ளது.
எந்த அணி நாட்டின் எதிர்காலத்தை எவ்வகையில் உயர்த்த முடியும் என்ற சிறந்த வரைவை முன் வைத்து ஒட்டு கேட்கின்றனரோ அந்த அணிக்கு ஒட்டு போடுங்கள்.
எதிர் கட்சியில் இரண்டு தவணைக்குச் சீட்டை சூடேற்றிக் கொண்டிருந்தவரை ஓரம் தள்ளி புதிவரைக் கொண்டு வாருங்கள்.
எதிர்கட்சியிலும் தான்தோன்றித் தனமாகக் காட்டு தர்பார் பண்ணிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு எதற்கு ஆட்சி உரிமை?
கூட்டணி வைப்பதில் ஒரு தெளிவு வேண்டும். ஏற்கனவே எட்டி உதைத்த கட்சிகளோடு மீண்டும் உறவாடிப் பிரியும் குருட்டணியாக இருந்தால் அத்தகைய குருட்டணி உருப்படியான அரசாங்கத்தை நடத்த முடியாது. அத்தகைய குருட்டணிக்கு எதற்கு ஓட்டு?
கருத்துக் கூறுவோர் அனைவரும் அரசியல் தெளிவு பெற்றிருப்பதை எண்ணி மகிழ்ச்சி. அரசாங்கத்தில் மாற்றம் தேவை என அனைவரும் விரும்புகிறோம். அதேவேலை, எந்தக் கட்சி என்று பாராமல், மக்களுக்காக சேவை செய்வோரை மட்டுமே தேர்வு செய்ய முயலுங்கள்.
எந்த ஆட்சிவந்தாலும் நம்மை தூக்கிவிட போவதில்லை .ஓட்டு அளித்தபின் நம்மை அம்போ என்று விட்டுவிடுவார்கள் .கடந்த கால தேர்தல்கள் நமக்கு இதை தெளிவாக உணர்த்துகின்றன .நம் சமுதாயம் மாற்றுவழியில் சிந்திக்க வேண்டும் .நம் சமுதாய முன்னேற்றத்திற்கு நம்மில் ஒவ்வொருவரும் கை கொடுக்க வேண்டும் என்பதில் நாம் தெளிவாகஇருக்க வேண்டும் .நமது ஒன்றுபட்ட செயலே நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் நிலை தன்மைக்கும் வித்திடும் .அரசியல் என்பது நமது சிறிய சமுதாயத்திற்கு கானல் நீர் போன்றது .
எனக்கு ஒன்று புரிய வில்லை ! 60 ஆண்டுகால சுதந்திர மலேசியாயாவில் , இந்தியர்களை காட்டி மா இ கா சேர்த்துள்ள பணம் அல்லது சொத்து எவ்வளவு என்றால் : 1200 மில்லியன் அல்லது அதற்கும் மேலே என்கிறது முந்திய தமிழ் நாளிதழ்கள் ! இதில் சில மலேஷியா நண்பன் மற்றும் மக்கள் ஓசை என்பது குறிப்பிட தக்கது ! இதில் 76 % சாமி வேலு விடம் உள்ளது ! ஆனால் இப்பொழுது இந்த பணத்தை மறந்து , புதிதாக இந்தியர்களுக்கு சொத்துடமை வேண்டும் , அல்லது தனிநபர் குடும்பத்திற்கு பொருளாதார வளர்ச்சி வேண்டும் என்பது , அடுத்த அடுத்து குழப்படிகளையும் , மண்டோர்களையும் உருவாக்கும் திடடமே தவிர , உண்மையில் ஒன்றும் இல்லை. எனவே மா இ கா களைப்படையாமல் இந்திய மக்களுக்கு நன்மை விளையாது ! இந்த மா இ கா கொள்ளை படித்த பணத்தில், B40 க்கு வேண்டிய 10 ஆயிரம் low cost house கட்டிட முடியும் ! இதுதான் உரு மாற்றம் ! மேலும் தொழில் கல்வி, மற்றும் சொந்த தொழில் என்று, 10 ஆயிரம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கலாம் ! மா இ கா ஒன்றும் செத்த பாம்பு இல்லை . ஒளிந்து கொண்டு, இந்தியர்களின் வாய்ப்புகளை திருடி தின்னும் மலைப்பாம்பு ! கொஞ்சநாள் அடிப்பது ஒளிந்து கொண்டிருக்கிறது . தேவை படும் பொழுது (GE 14 ) வெளியில் வந்து இரைதேடும் ! இதை கொள்ளாமல் , அரசியல் நீரோடடத்தில் , இந்தியர்கள் எழ முடியாது !
திருடர்கள், குண்டர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதைத் தான் இது நாள் வரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது வரை எழுந்தவன் எல்லாம் தனது சொந்த முயற்சியால் எழுந்தவன். இனி மேலும் சொந்த முயற்சியால் தான் நாம் எழ வேண்டும். திருடித் தான் பிழைக்க வேண்டும் என்றால் ம.இ.கா. வில் சேர்ந்தால் போதும்!
dhilip 2 அவர்களே ! இந்த அவலங்களையெல்லாம் அளித்து ஒழிக்க ஏதாவது வழிமுறை இருந்தால் சொல்லுங்கள்,உங்களோடு தோள் கொடுக்க நான் தயார்!
தமிழர்கள் குறிப்பாக மலேசியாவில் உள்ள இந்திய குடிமக்களின் சனத்தொகையில் 85 % விகிதத்தினர் உள்ளனர். ஆனால் 15 % உள்ள தமிழர் அல்லாதோரின் சூழ்ச்சிப் பிடியில் இருக்கின்றனர். நாட்டில் நல்லாட்சி நடத்த உருமாற்றம் தேவை தான் அது பக்காத்தான் அரப்பான் எனப்படும் நம்பிக்கை கூட்டணியானாலும் சரி தேசிய முண்ணனியானாலும் சரி தமிழர்களூக்கு அதிகமான தொகுதிகளை வழங்க வேண்டும்.
மலேசியா சுந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் தமிழர்களின் பொருளாதாரம் இன்னும் முன்னேற்றம் அடைந்த பாடில்லை. ஆகையால் முன்பு 13வது பொதுத்தேர்தலின் போது பக்கத்தான் ராக்யாட்டில் மக்களுக்காக உண்மையில் சேவை செய்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை குறிப்பாக கோத்தா ஆலாம் சா தொகுதியை மாறாக பிடுங்கி தமிழர் அல்லாதவரிடம் கொடுத்திருக்கின்றார்கள் ஆகையால் ஆளும் கட்சியோ அல்லது எதிர்கட்சியோ B40 என்னும் குறைந்த வருமானம் பெறும் மலேசிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமானால் பொதுவாக மக்களுக்கு சேவை செய்யும் தமிழர்களிடம் வழங்கப்பட வேண்டும்.
நம்பிக்கை கூட்டணியில் பெயரளவில் மட்டும் ஒரு பொருளாராக தமிழராகிய மாண்புமிகு குலசேகரன் அவர்களை நியமித்துள்ளார்கள். இது தவிர வேறு எந்த தமிழரையும் நியமனம் செய்யவில்லை. இதனை அண்மையில் பெர்சே தலைவர்களில் ஒருவரான டத்தோ அம்பிகா சிறீநிவாசன் அவர்கள் கூட சுட்டிக் காட்டியுள்ளார். எதிர்வரும் 14வது பொதுத்தேர்தலில் தமிழர்களூக்கு அதிகமான தொகுதிகளையும் பதவிகளையும் வழங்கும் கூட்டணிக்கே தமிழர்கள் வாக்களிக்க வேன்டும்.14வது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றால் எல்லாவகையில் பின் தங்கியிருக்கும் தமிழர்களுக்கு என்ன செய்வார்கள் என்று போட்டியிடுபவர்கள் தெள்ளத் தெளிவாக தேர்தல் அறிக்கையில் தெரிவிப்பது மட்டுமல்லாமல் அதனை அமலாக்கமும் செய்ய வேணடும் .இதுவே தாழ்ந்து கிடக்கும் தமிழனத்தை உயர்வு நிலைக்கு கொண்டு செல்லும் வழியாகும்.
குடிமகன்! தயவு செய்து ‘தமிழர்’, ‘தமிழர் அல்லாதோர்’ என்கிற பிரிவினை பேச்சு நம்மிடையே வேண்டாம். கோத்தா அலாம் ஷாவில் தமிழரான மனோகரனை ‘தூக்கி’ விட்டு, கணபதி ராவ் என்கிற தமிழரல்லாதவரை போட்டுவிட்டதாக அங்கலாய்க்கிறீரே. தயவு செய்து வேண்டாம். கேமரன் மலையில் கடந்த 45 ஆண்டுகளாக, இரவு பகல் பாராது, தனது சொத்தையெல்லாம் கட்சி பணிகளுக்கு வாரி இறைத்து {5 முறைகள் அதே தொகுதியில் போட்டியிட தேர்தல் செலவினங்க ளுக்காக தனது 9 ஏக்கர் நிலத்தினை விற்றவர்} மட்டுமல்லாமல் கட்சி பணிகளுக்காக நாடு முழுவதிலும் தனது மோட்டார் சைக்கிளிலேயே பயணித்து வந்தவர் சிம்மாதிரி என்கிற தமிழரல்லாதவர். 2013 தேர்தலில் கேமரன் மலை தொகுதி வெற்றி பெரும் தருணத்தில் மனோகரன் என்கிற தமிழருக்கு சீட் கொடுக்கப்பட்டது. தமிழரரல்லாத எவர் வாயிலாவது இவ்விஷயம் வெளிவந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஆகவே, தயவு செய்து நம்மிடையே பிரிவினை பேச்சுக்கு இடம் கொடுக்காதீர்கள் நண்பர்களே. நானும் தமிழன்தான்.
நண்பர் சிங்கம் அவர்கல் கூறும் : ‘தமிழர்’, ‘தமிழர் அல்லாதோர்’ என்கிற பிரிவினை பேச்சு நம்மிடையே வேண்டாம் என்னும் அறிவுரையை நானும் வழிமொழிகிறேன் ! இதில் நான் எவ்வளவு உறுதியானவன் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் ! எனவே மா இ கா வின் இந்த 1 .2 பில்லியன் சொத்தை எப்படி இந்தியர்களின் சொத்தாக அறிவிப்பது என்பதுதான் இங்கே என் வாதம் ! இதற்க்கு முன்னம் 2012 ல் , EGYPT ல் ஆட்சி கவிந்த பொழுது , அந்த நாடு RCI (ROYAL COMMISSION INQUIRY) வைத்து அந்த நாட்டின் 5 பணக்காரர்களின் சொத்துக்களை முடக்கி , அரசாங்க கஜானாவில் சேர்த்து ! புரட்சியாளர்களுக்கு 1 லட்சம் மற்றும் அரசாங்க வேலை தந்தது ! அப்படி செய்ய ஹிண்ட்ராப் TUN மகாதிருடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் ! அதே போல் மேடான் (PJ) கலவரத்துக்கும் RCI நடத்த வேண்டும் எனும் உடன்படிக்கை செய்ய வேண்டும் ! ஆனால் நம் HINDRAF தலைகள் தான் முறுக்கி கொண்டு இருக்கிறார்களே ! திரு . குலசேகரன் நினைத்தால் முடியும் காரணம் ஆரம்பத்தில் உதயகுமாருக்கு பார்லிமெண்டில் , கோயில் உடைப்பு சம்பவங்களுக்காக , வடட மேஜை மாநாடு அவர்தான் ஏற்பாடு செய்தார் ! எனவே , யாராவது உதய குமார் அவர்களுக்கும் , ஹிண்ட்ராப்பிற்கும் பாலம் அமைத்து , 5 ஹிண்ட்ராப் முன்னோடிகளை இணைத்து , இந்த ஒப்பந்தத்தை TUN மகாதிருடன் செய்ய வேண்டும் ! அப்படி செய்யும் பட்சத்தில் , சாமி வேலு திருடிய அனைத்து சொத்துக்களும் முடக்க பட்டு , HINDRAF ஆரம்பத்தில் அரசாங்கத்திடம் கேட்டிட 4 பில்லியனில் , 1 .2 பில்லியன் கிடைத்து விடும் ! முதலில் யார் இணைப்பது இந்த HINDRAF 5 தலைகளையும் , உதயகுமார் மற்றும் வேதாவை இணைத்து பேச வேண்டும் ! TAPAH பாலாஜி அவர்களே , எப்படி நீங்கள் இந்த விஷயத்தில் உதவ போகுறீர்கள் சார் ?
Dhilip 2 ! அருமையான யோசனை. சிறை சென்ற 5 ஹிண்ட்ராப் தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும். இவர்களை இணைக்க உதயகுமாரும் வேதமூர்த்தியும் முன் வரவேண்டும். பழைய கசப்புகளை எல்லாம் மூட்டைக்கட்டி ஒரு ஓரத்தில் கிடத்திவிட்டு, புதிய சிந்தனைகளுக்கு வித்திட வேண்டும். முடியும். இந்தியர்களுக்கு, ஒரு புதிய ஒப்பந்தத்துடன், இவர்களனைவரும், மகாதீரை அணுக வேண்டும். நன்மை உண்டாக வாய்ப்புக்கள் உண்டு. முயல்வோம். சிலரது கைப்பேசி எண்கள். உதயகுமார்: 0133504711 கணபதி ராவ்: 0122861776 மனோகரன் மலையாளம்: 0123088154 வசந்தகுமார்: 01126181102 (மற்ற இருவரது கைப்பேசி எண்கள் செயல்படவில்லை)
மனோகரன் தமிழர் என்று யார் சொன்னார்?
சிங்கம் // அன்புள்ள சிங்கம் நானும் முன்பு உங்களைப் போல் திராவிடன்,இந்தியன் என்று வாழ்ந்தவன்.இந்த இந்தியன்,திராவிடன் என்பதில் நமது அடையாளம் இல்லாமல் போனதினால், நாம் தமிழர்கள் என்று உணரத்தொடங்கிவிட்டேன்..தமிழர்கள் என்பதில் என்ன தவறு அது நமது அடையாளம். இந்நாட்டில் தெலுங்கர்கள்,மலையாளிகள் சங்கம் இருப்பதால் தமிழர்கள் என்ற நமது அடையாளத்தை காட்டிக் கொள்வதில் என்ன தவறு .கணாபதி ராவ் அவர் இனத்திற்காக தெலுங்கு பள்ளி அமைத்திட சிலாங்கூர் மாநில அரசில் மானியம் வாங்கித்தந்துள்ளார் அது அவரது இனப்பற்று மனோகரன் அவர்கள் சட்டமன்ற உறுப்பிராக இருந்த போது தமிழ்ப் பள்ளிக்காக போராடினார் அதுவும் அவர் தமிழராய் இருப்பதால்..சிம்மாதரி வெற்றி பெற்றால் அவர் தாய் மொழியை மறந்து விடுவாரா என்ன? ஆகையால் தமிழன் தன் அடையாளத்தை கா ட்டினால் தவறொன்றுமில்லை. அது நம் இனம் மொழி ஆகியவற்றில் உள்ள பற்றுதல் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
நன்றி குடிமகன்! உங்கள் கருத்தில் பிழையில்லை.
singam என்பவரும் சிம்மாதிரி என்பவரும் ஒருவரே . அவர் எழுதிவைகளை படித்தால் புரியும்
dhilip 2 அவர்களுக்கு நன்றி.என்னுடைய கருத்தை இங்கு சொல்ல ஆசை படுகிறேன்”.என்னடா இவன்,நாம் ஒன்று சொன்னால் இவன் வேறு பக்கம் இழுக்கிறானே”என்று என்ன வேண்டாம்.என்னுடைய என்னப்படி, உதயகுமார்,வேதமூர்த்தி,கணபதிராவ் மற்றும் மற்ற இருவரோடு சேர்த்து இவர்கள் யாவரும் இனிமேல் ஒட்ட முடியாத கண்ணாடிகள்.அப்படியே ஒட்டவைத்தாலும் உடைந்த அடையாளம் அதாவது தழும்புகள் இருந்தே ஆகும்.இது நமது சமுதாயத்துக்கு நன்மை பயக்காது .இந்தப்பகுதிக்கு நான் அறிமுகமாகி இரண்டு வருடம்தான் ஆகிறது.எனக்கு முன்பே singam , தேனீ,ms maniam மற்றும் abraham terah போன்றவர்கள் அன்றிலிருந்து இன்று வரை மிகவும் விவேகமான கருத்துக்களை சொல்வதில் சிறந்தவர்களாக இருக்கையிலே, இவர்களோடு நானும் நீங்களுமாக சேர்ந்து முதலில் கலந்து பேசி பிறகு ஒரு நல்ல முடிவை இந்த சமூதாயத்தின் நன்மைகளை கருதி செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்! dhilip 2 அவர்களின் பதிலை எதிர்பார்க்கிறேன்!!
எனக்கு இங்கு உதவி தேவை படுகிறது ! யாரால் முதலில் HINDRAF தலைவர் வேதாவையும் , அவர் அண்ணன் உதய குமார் அவர்களையும் இணைத்து பேச்சு வார்த்தைகள் தொடங்க முடியும் ? பிறகு தான் HINDRAF முன்னோடிகள் 5 பேருடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் ! நல்ல தூதுவர் யார் ? ஆலோசனை தேவை !
Dhilip 2 ! நல்ல முயற்சி. நண்பர் உதயமாருடன் தொடர்பு வையுங்கள். அவர் சற்று கண்டிப்பானவர். இருப்பினும், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். நண்பர் கயவன் அவர்களே! நான் சிம்மாதிரி அல்ல. ஆனாலும் அவரிடம் நெருக்கம். யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல, என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே முக்கியம். நல்லவை நடக்கட்டும்.
abraham terah // முன்னாள் கோத்தா ஆலா சா சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் அவர்கள் தமிழர்..அவரது தந்தையார் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்.நீங்கள் ஆராய்ந்து பாருங்கள் உண்மை தெரியும்.
தமிழனுக்கு மலையாளம் என்றொரு பேரா? ( மனோகரன் அவர்கள் தமிழர்)
(நல்ல முயற்சி. நண்பர் உதயமாருடன் தொடர்பு வையுங்கள்.) இதற்க்கு திரு உதயகுமார் அவர்கள் நிச்சயம் சம்மதிக்க மாடடார். பட்டது போதும்.
குடிமகன் சார், நன்றி! வேறு ஒரு மனோகரனுடன் குழம்பிவிட்டேன்!
வழக்கம் போல ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கல ……. நல்ல வாயிலையே வடை சுட்டு வித்தோம் … எல்லாரும் ….