பக்கத்தான் ஹரப்பானின் முன்னணித் தலைவர்களில் இந்தியப் பிரதிநிதிகள் இல்லாதது குறித்து வழக்குரைஞரும் மனித உரிமைகள் போராளியுமான அம்பிகா சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார்.
பெர்சத்துவான் ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தியையும் மற்றும் மஇகாவின் முன்னாள் தலைவர் ஜி. பழனி வேலுவின் ஆதரவாளர்களையும் தமது பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையில் ஹரப்பான் அவைத் தலைவர் மகாதிர் ஈடுபட்டிருப்பது பற்றி எதிர்வினையாற்றிய அம்பிகா இதைக் குறிப்பிட்டார்.
மகாதிர் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வழிகளை கண்டறிவதில் ஈடுப்பட்டுள்ளார். இந்தியச் சமூகத்துடன் தொடர்பு ஏற்ப்டுத்திக்கொள்வது முக்கியமானது என்று தாம் கருதுவதாக அம்பிகா கூறினார்.
ஹரப்பான் தலைமைத்துவத்தைப் பார்க்கையில் அதில் இந்தியப் பிரதிநிதித்துவம் இல்லை. அதில் இந்திய உதவித் தலைவர் இல்லை. இந்நிலையில் மக்களை எப்படி சந்திக்கப் போகிறோம் என்று அவர் வினவினார்.
“இந்தியர்களின் வாக்குகள் வேண்டும் என்பதில் ஹரப்பானுக்கு அக்கறையிருந்தால், அதை அவர்கள் தலைமைத்துவ பிரதிநிதித்துவத்தில் காட்ட வேன்டும். எனக்கு, அது மிக முக்கியமானதாகும்”, என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மகாதிர் இந்தியக் குழுக்கள் பலவற்றை சந்தித்திருப்பதாக கூறப்படும் செய்திகளை ஒரு நல்ல நடவடிக்கை என்று ஒப்புக்கொண்ட அம்பிகா, அது ஹரப்பான் உச்சநிலை தலைமைத்துவத்தில் பிரதிபலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய அம்பிகா, மு. குலசேகரனை பொருளாளராக நியமித்திருப்பது வெறும் அடையாளத்திற்காக செய்யப்பட்டிக்கிறது என்பது தமது கருத்து என்றார்.
“நான் இதை ஹரப்பானிலிருக்கும் எனது நண்பர்களிடம் தெரிவித்து விட்டேன். ஆனால், எந்த மாற்றத்தையும் நான் இன்னும் காணவில்லை”, என்று அம்பிகா மேலும் கூறினார்.
தேர்தல் நெருங்கி விட்டது. அவர்கள் விரைந்து செயல்பட வேண்டும். அவர்களுக்கு அதிக நேரம் கிடையாது என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து ஹரப்பான் முன்னெடுப்புகள் செய்திருப்பதை நல்லது என்று கூறிய அவர், சரியான மக்களுடன் அல்லது குறைந்த பட்சம் எல்லாத் தரப்பினருடனும் பேசுவது மிக முக்கியமானது என்றாரவர்.
அரசியல் வேண்டாம்
பிரபலமான வழக்குரைஞரான அம்பிகா அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்று அவரை பலர் கேட்டுக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், தமக்கு அதில் நிச்சயமாக விருப்பம் இல்லை என்று மேலும் தெரிவித்தார்.
இந்திய பிரதிநிதி அவசியம் வேண்டும் அதே போல் இந்திய சமுதாய வாக்கு வேண்டும் என்று நினைத்தால் மதிப்பு க்குரிய அம்பிகை அவர்கள் சொல்வதை போல் பக்கத்தான் ஹராப்பான் இதை செய்ய வேண்டும்.
பூனைக்கு யார் மணி கட்டுவது.? தற்போது பக்கத்தானில் உள்ள குலசேகரன்,ராமசாமி,சிவராசா, போன்றோர் வெறும் வெத்து வேட்டுகளாக உள்ளனர். திருமதி அம்பிகாவே அதற்கு தகுதியானவர் என கருதுகிறேன். அரசியலுக்கு அவர் வருவாரா?
ஹரப்பான் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் அதில் இந்தியப் பிரதிநிதித்துவம் இல்லை என்பது இப்போதாவது உங்களுக்கு தெரிய வந்ததே அம்மணி….!
ஆனாலும் உங்கள் ஹரப்பானில் உங்களின் தலைமையில் நாங்கள் ஓர் இந்திய அமைப்பை எதிர்பார்க்கிறோம். நடக்குமா?
நான் பலமுறை இந்த தகவலை பற்றி எழுதியுள்ளேன் . பார்ட்டி பெர்சத்து / பார்ட்டி பரிபூமி (parti bersatu / parti pribumi ) கட்சிகளில் நமது இந்தியர்கள் சார்பாக தெளிவாவன முன்னணி தலைவர்கள் யாரும் இல்லை , இதனை இந்த கட்சி மேன்படுத்த வேண்டும் , அதன் பின்னரே நமது ஆதரவை தெரிவிக்கமுடியும் . திரு மகாதீர் கூறியது போல மலாய் இனம் மட்டுமே பார்ட்டி பரிபூமியில் அங்கத்தினர் ஆகலாம் , இந்தியர் / சீனர் அங்கத்தினர் ஆகா அனால் கட்சிக்கு ஆதரவு கொடுக்கலாம் என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது . அதேபோல , திரு மகாதீர் / திரு முகுட்டின் பதவி காலத்தில் செய்த இனவேற்றுமையை இந்தியர்களால் மறந்திட முடியாது , அதன் காரணமாக இந்த இருவரும் உள்ள கட்சிக்கு ஆதரவு அளிக்கும் நமது சமுதாய தலைவர்கள் , நமக்கு வேண்டிய எதிர்பார்ப்புகளை இந்த இருவரிடமும் எழுதி வைத்து , அவை கிடைப்பதை உறுதிப்படுத்தி செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் . நம் சமுதாயதை இந்த இருவரும் பகாடை காயாக பயன்படுத்திட அனுமதிடவேண்டாம் . இதனை நன்கு உணர்ந்து செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன் .
அம்மணி! நீங்கள் மலேசிய அரசியல் பேசுபவர். நாங்கள் எல்லாக் காலங்களிலும் மலேசிய இந்திய அரசியல் பேசுபவர்கள். இப்போது தான் மகாதீரின் நடவடிக்கைகளை பார்த்த பிறகு உங்களுக்கும் கொஞ்சம் உறைத்திருக்கிறது! இது தொடரட்டும்!
அம்பிகா அவர்கள் கூறுவது சரியே.
நம்பிக்கை கூட்டணியில் இந்திய பிரதிநிதி வேண்டும் என்பதைவிட, இந்த கூட்டணி வெற்றிப் பெற்றால் இந்தியர்களுக்கு புதிய அரசாங்கம் என்ன உரிமைகளை வழங்கு, எந்த வகையான சலுகைகளை அறிமுகப்படுத்தும் என்ற சட்டரீதியிலான உடன்பாடு கொள்வதே தேவையான ஒன்று என்று நான் கருதுகிறேன், ௧௯௫௭ ஆம் ஆண்டுமுதல் பல தலைவர்கள் நம் இந்திய சமூகத்திற்கு தலைமையேற்ற்றுள்ளார்கள், பிரதிந்தித்துள்ளார்கள் அவர்கள் அனைவரும் நமக்கு என்ன செய்தார்கள் என்ற கேல்வி எழுந்த காரணத்தால்தான் கடந்த ௨ தேர்தல்களிலும் இந்தியர்கள் பெரும்பாலும் எதிரணி கூட்டணிக்கு வாக்களித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தியாகும், நம்பிக்கை கூட்டணியில் பிரதிநிதித்துவம் வழங்கிய பிறகு நம்மை பிரதிந்திப்பவர் கூட்டணியின் தலைமைத்துவத்திற்கு சாமரம் வீசிக்கொண்டு அவர் மட்டும் அனைத்து வகை சலுகைகளையும், உரிமைகளையும் அதற்கு மேலாகவும் அனுபவித்துக்கொண்டு நம்மை வெறுமனமே விட்டு விட்டால் நம் இந்தியர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்த்து, பிரதிநிதி என்பதைவிட சட்டரீதியான உறுதிமொழியே நமக்கு வேண்டும் என்று கேட்கலாம்.