சீ போட்டிகள்: மலேசியாவிடம் தங்கம் குவிகிறது, இதுவரை 100 தங்கப் பதக்கங்கள்

சீ  விளையாட்டுப்   போட்டிகளில்  மலேசியா   சற்று  முன்னர்தான்  அதன்   100வது  தங்கப்  பதக்கத்தைப்  பெற்றது.  அது  rhythmic gymnastics  நிகழ்வில்   கிடைத்தது.

அந்தத்  தங்கத்தைப்   பெற்றுத்தந்த  ஜிம்னாஸ்ட்  வீராங்கனைகளுக்கு    இளைஞர்,  விளையாட்டு   அமைச்சர்    கைரி    ஜமாலுடின்   பாராட்டும்   நன்றியும்    தெரிவித்தார்.

கோலாலும்பூரில்    நடைபெறும்   சீ  விளையாட்டுப்   போட்டிகளில்   111   தங்கப்  பதக்கங்களைப்  பெறுவது   மலேசியாவின்   இலக்கு.  விளையாட்டுக்கள்  புதன்கிழமை   முடிவுக்கு   வருகின்றன.

100  தங்கம்,   68  வெள்ளி,  63   வெண்கலம்   என   மொத்தம்   231  பதக்கங்களுடன்  மலேசியா  பதக்கப்  பட்டியலில்   முதலிடத்தில்   உள்ளது.