பெர்சே 3 ஆர்ப்பாட்டக்காரரின் இடது கண் பாதிப்பிற்கு ரிம40,000 வழங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

 

courtordersdamageபெர்சே 3 ஆர்பாட்டத்தின் போது போலீஸ் படையினர் வெடித்த கண்ணீர் புகைக் குண்டால் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற 32 வயதான அஸ்ருல் வாடி அஹமட் அவருடைய இடது கண் பார்வையை இழந்தார்.

அதற்கு இழப்பீடாக ரிம40,000 வழங்கும்படி அரசாங்கத்திற்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஆனால், ஆர்பாட்டம் நடந்த இடத்திலிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் இட்ட உத்தரவை அஸ்ருல் அலட்சியப்படுத்தியால் வழங்கப்பட்ட இழப்பீட்டில் 30 விழுக்காட்டை நீதிமன்றம் குறைப்பதாக நீதிபதி முகமட் ஃபைருஸ் ஜாப்பிரில் அவரது தீர்ப்பில் கூறினார்.

இதன் விளைவாக அஸ்ருல் ரிம28,000 மட்டுமே இழப்பீடாகப் பெறுவார்.

மேலும், இந்த வழக்கின் செலவுத் தொகையாக ரிம30,000 அளிக்கும்படி நீதிபதி அரசாங்கத்திற்கும் போலீசுக்க்கும் உத்தரவிட்டார்.