எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ம.இ.கா. பக்காத்தானுடன் இணையும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை என, ம.இ.கா. தகவல் பிரிவின் முன்னாள் தலைவர் எல்.சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
தற்போது நெருக்கடியில் இருக்கும் ம.இ.கா.-வின் வழக்கு, அதன் முன்னாள் தேசியத் தலைவர் ஜி.பழனிவேலுவுக்குச் சாதகமாக போகும் பட்சத்தில், ம.இ.கா. பக்காத்தானுடன் கைக்குழுக்கும் சாத்தியம் ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார்.
இது வெறும் அனுமானமே, பெரும்பான்மை ம.இ.கா. உறுப்பினர்கள் அம்னோவின் இனவாத அரசியலைச் சகிக்கமுடியாமல், அதன் உறவை முறித்துக்கொண்டால் இவ்வாறு நடக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
“பிரதமர் நஜிப் மற்றும் அம்னோவின் ஒருசில மேல்மட்டத் தலைவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லாமே இனவாத அரசியலையே முன்னெடுத்துச் செல்கின்றனர்,” என்றார் அவர்.
இந்திய வாக்காளர்கள் ஆர்யுயு355, கட்கோ, சட்டப்பிரிவு 164, திருவள்ளுவர் சிலை மற்றும் அம்னோ தலைவர்கள் சிலரின் இனவாதத்தைத் தூண்டும் அறிக்கைகளால் அம்னோ மீது கோபமடைந்துள்ளனர்.
“எனவே, பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் அதுவென்றால், 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்துடன் ஒத்துழைப்பதில் தவறில்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து,” என்று அவர் பெரித்தா டெய்லி இணையப் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.
மகாதீரின் அழைப்பு பற்றி கூறுகையில், “டாக்டர் மகாதீர் எங்களை அழைத்தது உண்மையே. நாட்டின் முன்னாள் பிரதமர் எனும் முறையில், மரியாதை நிமித்தம் அவரைச் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவர் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவு கொடுப்பதில் எங்களுக்குப் (பழனிவேலு தரப்பு) பிரச்சனையில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.
“இந்திய வாக்காளர்களின் தேவையை அவர் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே நிபந்தனை. ஒருவேளை, நஜிப் இன்னும் சிறப்பானதை இந்தியர்களுக்கு வழங்க முன்வந்தால், பாரிசானிலேயே நிலைத்து நிற்கும் சாத்தியமும் உண்டு. இந்தியர்களுக்கு இந்தத் தலைவர்கள் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்று அவர் மேலும் கூறினார்.
பொதுவாக, டாக்டர் மகாதீரும் நஜிப்பும் இந்தியர்களின் மேம்பாட்டிற்குச் சிறந்ததொரு பங்களிப்பைச் செய்துள்ளனர், ஆனால், ம.இ.கா. தலைமைத்துவமே அதனைப் பாழாக்கியது என்றார் அவர்.
“எனவே, ம.இ.கா. பாரிசான் அல்லது பக்காத்தான் – எந்தக் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தாலும் அது தவறில்லை.”
கடந்த வாரம், ஹிண்ராப்ட் தலைவர் வேதமூர்த்தியைச் சந்தித்த மகாதீர், ம.இ.கா. உட்பூசலின் காரணமாக, உறுப்பினர் தகுதியை இழந்த பழனிவேலு தரப்பினரைச் சந்திக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.
ம.இ.கா.-வின் ஆதரவு பக்காத்தானுக்கா அல்லது பாரிசானுக்கா என்று கேட்டதற்கு, பழநிவேலு மற்றும் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இடையிலான வழக்கு விசாரணையின் முடிவு அதனைத் தீர்மாணிக்கும் என்று சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
வழக்கில் பழனிவேலுவின் தரப்பு பலமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
“ஒருவேளை வழக்கில் நாங்கள் வெற்றி பெற்றால், பழனிவேலு மீண்டும் ம.இ.கா. தலைவராக பதவியேற்பார். அந்நேரத்தில், ம.இ.கா. பக்காத்தானுடன் இணையும் வாய்ப்பு உள்ளது,” என்றார் சிவசுப்ரமணியம்.
அவரின் கூற்றுப்படி, ம.இ.கா. உட்பூசலுக்குப் பின், 40-க்கும் மேற்பட்ட தொகுதி தலைவர்கள் (முன்னாள்), 800-க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்கள் (முன்னாள்) இன்னும் பழனிவேலுவுக்கு ஆதரவாக உள்ளதாகத் தெரிகிறது.
கோதண்ட கோநார் :
மஹாதிர் ஸ்கண்டார் குட்டியை இந்தியர்கள் நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். மஹாதிர் மலேசிய இந்தியர்களுக்கு எதையுமே செய்யவில்லை என்று தாமே ஒப்புக்கொண்ட போதும், அவரிடம் எதிற்பர்க்கும் ஆறிவாளிகள் நம்மில் இருக்க தான் செய்கிறார்கள்.
அரசியலில் நன்கு செயல்பட, ஆராய்ந்து, சிந்தித்து, பகிர்ந்திடும் தருணம் நமக்கு ஏற்பட்டுள்ளது. பேச்சை குறைத்து, மூளைக்கு வேலை கொடுத்தால், இந்தியர்களின் பிரச்சினைகள் தீர வழி ஏற்படும். Hope for the best .
பக்கத்தான் ஹரப்பானில் MIC சேர்ந்தால் அது PAKATAN HARAPAN னுக்கு நல்லதல்ல . அமினா புகுந்த வீடு உருப்படாது என்பது போல் MIC புகுந்தால் அங்கும் ஜாதி பிரச்னை உருவாகும் . கவனம் .
இந்திய வம்சாவளி மலாய்க்காரரான மகாதீர் தான் இந்தியர்களுக்காக வழங்கிய சலுகைகள், இந்திய சமுதாயத்திற்கு சென்றடையாமல், அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்தை பிரநிதித்தவர்களே குறிப்பாக மஇகாவிற்குள்ளே பங்கு போட்டு மாவிடித்து கூத்தடித்ததை கண்ட பிறகுதான்,
இந்தியர்களுக்காக மஇகா மூலமாக என்ன சலுகை வழங்கினாலும் அது இந்திய சமுதாயத்திற்கு சென்றடையாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டதினால்தான், “மலேசிய இந்தியர்களுக்கு எதையுமே செய்யவில்லை” என்று மகாதீர் காரணம் கூறினாலும் ஏற்று கொள்ள கூடியதே.
சந்தர்ப்ப அரசியலில் ஈடுபடுவது போல் தெரிகிறது.
1 ) மறுபடியும் உங்கள் முகத்தையே பார்க்க நாங்கள் விரும்பவில்லை.
௨) இப்படி பேசி இருபுறமும் எங்களை அடமானம் வைத்து சம்திங் எதிர் பார்ப்பதாகவும் தெரிகிறது.
ஊகும்! நடக்க வாய்ப்பில்லை!
இப்போதைக்கு ம இ கா 1200 மில்லியன் சேர்த்தது பத்தாதா ? இனிமேல் PH இந்தியர்களுக்கு செய்யும் அனைத்தையும் ம இ கா திருட வேண்டுமா ? மா இ கா இப்படி விளம்பரம் செய்வது என்பது , தன்னுடைய எஜமானனை பயமுறுத்தி அதிகமாக கொள்ளையடிக்க ! மத மாற்று சட்டத்தில் , குழந்தைகளின் நிலையை ஒரு பாலர் பள்ளி ஆசிரியை தனியாக அரசாங்கத்தை எதிர்த்து 10 ஆண்டுகளாக போராடுகிறார் ! இந்த மானங்கெட்ட மா இ கா , ஒரு நடிப்புக்கு கூட என்ன என்று கேட்கவில்லை; இவர்கள் தான் இந்தியர்களை காப்பாற்ற போகிறார்களா ? செருப்பால் அடித்தாலும் , கையை முத்தமிட தயாராக இருக்கும் இவர்கள் , தேவை படடாள் பாஞ்சாலியை பணயம் வைக்க தயங்க மாட்டார்கள் !
நான்வேறுகோணத்தில்யோசிக்கிறேன்
வரும் பொதுத்தேர்தலில்,ஒருவேளைபிஎச்
கட்சிகள்வெற்றிப்பெற்று தலைவர்கள்
தோன்றும்மேடையில் தலைவர்களின்
அருகில் ஒருதமிழ்முகம் இல்லையேஎன்று
உள்மனம் உள்ளுரவுருகும்,திருடன்
எப்போதும் திருடாமல் திருந்துவதற்க்கான
வாய்ப்பும் உண்டு,பழனிவேல் மஇகதலைவரா
க இருந்தபோதுகுறிப்பிட்டு சொல்லும்
அளவுக்கு பெரிய திருடன்அல்ல,மேலும்
முருகபக்த்தன்,திருசிங்கம் இப்போதான்
நேர்கோட்டில் பயணிக்கிறார்,நான்
மேலேபதிவிட்டுள்ள கருத்துக்கு
திருசிங்கத்தின்கர்ஜனை என்ன?,ஒரேஉறையில்
இருகத்திகள் வேதா& பழனிவேல் இருப்பதுசரிப்பட்டுவருமா?வேதாசமுதாய
நலன்கருதி என் ஜி ஒவாக எதிர்கட்சிகளை
ஆதரிக்கவேண்டும்!
இந்தப் பகுதிக்கு ஐயா தேனி
அவர்களும் விருப்பு வெறுப்பின்றி
கருத்து களமாடவேண்டும் வணக்கம்!
நன்றி அலை ஓசை! என்னுடைய நோக்கு very simple . மகாதீர் எந்த நோக்கத்துடன் வேதமூர்த்தியை அணுகினாரோ எனக்கு தெரியாது. வேதமூர்த்தி செய்யவேண்டிதெல்லாம் இதுதான். உதயகுமார் உட்பட அனைத்து ஹிண்ட்ராப் ஆதரவாளர்களையும் ஒன்று கூட்ட வேண்டும். கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து, அனைத்து பக்கத்தான் தலைவர்களையும் அழைக்க வேண்டும். மகாதீர் முன்னிலையில் ஹிண்ட்ராப் பை பக்கத்தானில் இணைக்க வேண்டும். அதிலிருந்து கிளைகள் பெருக்கம்,தொகுதி உடன்பாடு, என பல விஷயங்களை செயல்படுத்தலாம். செய்ய முடியும் . செய்வார்களா? (அதன் பிறகு பாருங்களேன், ம.இ.கா. விலிருந்து பிடுங்கி கொண்டு எத்தனை பேர் இங்கே வந்து விழுவார்கள் என்பதை பார்க்கலாம். நாம் ம.இ.கா.வை தேடி போகவேண்டியதேயில்லை.)
கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க விரும்பும் ஒரு முன்னாள் ம.இ.க. கீழ்மட்டத் தலைவர் பேச்செல்லாம் ஒரு பேச்சா? ம.இ.க. கூட்டணி மாறும் என்பதெல்லாம் வீண் கற்பனை.
முன்னாள் தலைவர் டத்தோ பழனிவேல் அவர்களின் ஆதரவைப் பெற்றாலும் கீழ்மட்டத் தலைவர்கள் நேரிடையாகக் களத்தில் இறங்க துப்பில்லாதவர்கள் காரணம் அவர்களும் காலா காலமாக அம்னோ தொகுதி தலைவர்களிடம் பிச்சைக்குக் கையேந்தியவர்தாம்.
டத்தோ பழனிவேலுவே ஒரு பேசா மடந்தையாகி விட்டார். இன்னும் அவருக்கு அரசியலில் அஸ்தமனம்தான். அதனால் டத்தோ பழனிவேலுவின் ஆதரவாளரால் பக்கத்தான் ஹரப்பானுக்கு எவ்வித பயனும் இருக்கப் போவதில்லை.
பக்கதான் ஹரப்பான் ஹின்றாப்பை கூடிய விரைவில் வலுப்படுத்தி கிழக்குத் தீபகற்பத்தில் செயல்பட வைத்தால் ஒருகால் கணிசமான நகர்புற இந்தியர்களின் வாக்குகளைப் பெறலாம்.
புறநகர் மக்களின் வாக்குகளைப் பெற வேண்டுமானால் நாட்டு நடப்பில் மக்கள் அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் கரை கடந்து போயுள்ளதை தக்க வகையில் எடுத்துச் சொன்னால் புற நகர் இந்தியர்களின் வாக்குகளைப் பெறலாம். இல்லையேல் 14-வது தேர்தலில் இந்தியர்கள் பெரியதொரு அரசியல் மாற்றத்திற்கு உதவ முடியாது.
ஹின்றாப் தீவீரவாத கருத்துக்களை விடுத்து மக்களுக்குப் பயன்படும் விசயங்களை முன் நிறுத்தி தக்க எதிர்கால திட்டங்களின் வழி மக்களை அனுகினால் மீண்டும் தலை தூக்கலாம்.
திரு. சிங்கம் அவர்கள் கூறியது போல் பழைய ஹின்றாப் தலைவர்கள் ஒன்று கூட வேண்டும் அதில் பக்கத்தான் தலைவர்கள் இந்தியர்களின் வாழ்க்கை நலனுக்குத் தங்களின் உறுதிப்பாட்டைத் தெரியப் படுத்த வேண்டும். இது வெற்று வாய் சவடாலாக இருக்கக் கூடாது.
எதிரணி கட்சி வெற்றிபெற்றால் அரசாங்கம் மற்றும் அரசாங்க தொடர்பு உடைய நிறுவனங்களில் இந்தியர் வேலைப் வாய்புக்கள் கூட்ட உத்திரவாதம் கொடுக்க வேண்டும்.
உயர்கல்விக் கூடங்களில் தற்சமயம் அரசாங்கம் கொடுத்துவரும் ஆதரவுடன் ஏழைப்பாட்டாளிகளின் பிள்ளைகளுக்கு உதவ தக்கச் செயல்வடிவம் இருக்க வேண்டும். தற்சமயம் வசதிப்படைத்த இந்தியர்களின் பிள்ளைகள் மட்டுமே உயர்கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். ஏழைகளின் பிள்ளைகள் பல்வேறு காரணங்களால் கீழ்நிலைப் படிப்போடு மட்டம் போட்டு விடுகின்றனர்.
பொருளாதாரத் துறையில் எத்தகைய சலுகைகளைப் பக்கதான் அரசாங்கம் செய்ய முடியும் என்பதை முன் வைக்க வேண்டும்.
சிலாங்கூர் அரசாங்கத்தில் இருக்கும் இந்தியரால் அம்மாநில இந்தியர்களுக்கு பெரியதொரு நன்மை எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
சிலாங்கூரில் பக்கத்தான் கூட்டணி மக்களுக்குச் சேவை செய்யக் கூடிய அரசியல் தலைவர்களை இனம் கண்டு முன்னிலைப் படுத்த வேண்டும்.
இல்லையேல் ஏதோ தே.மு. மீது இருக்கும் வெறுப்பால் பெற வேண்டிய வாக்குகளை மட்டுமே பெற முடியும் மாறாக பக்காத்தான் ஆதரவு வாக்கு என்பது ‘die hard’ கட்சி உறுப்பினர்களிடமிருந்து மட்டுமே பெற முடியும்.
பக்காத்தான் நடுவண் ஆட்சி அமைக்கும் கணவு வெகு தொலைவிலேயே உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் அரசியல் மாற்றத்தைக் கொண்டு நாட்டு நடப்பைக் கொண்டுதான் தேர்தலைக் கணிக்க முடியும்.
செருப்பால் அடித்தாலும் கையை முத்தம் கொடுக்க தயாராக இருக்கும் தலைவர்களை கொண்ட ஒரு மானங்கெடட பிரிவு தேவையில்லை ! வேண்டும் என்றால் பங்களாதேஷ் காரர்களுக்கு தலைவர்கள் ஆகட்டும் …. எங்களை காட்டி திருடிய பணத்தை திருப்பி எங்களிடமே கொடுத்து விட்டு !