உள்நாட்டு வருவாய் வாரியம் (ஐஆர்பி), புத்ரா ஜெயாவின் “அரசியல் தலையீட்டின்” காரணமாகத்தான் அது டாக்டர் மகாதிர் முகம்மட்டின் மகன்கள் மற்றும் நண்பர்களின் நிறுவனங்களின்மீது அதிரடிச் சோதனைகளை நடத்தியதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.
“இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை”, என அதன் தலைமை செயல் அதிகாரி சபின் சமிதா இன்று சைபர் ஜெயாவில் கூறினார்.
முன்னாள் பிரதமரின் மகன்களான மொக்சானி, மிர்சான், முக்ரிஸ் ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனங்கள்மீது அவசியம் கருதிச் சோதனை நடத்தப்பட்டது என்றாரவர்.
வரிகளை முறையாக செலுத்துவோரிடம் ஐஆர்பி நியாயமாகவே நடந்துகொள்கிறது என்றவர் சொன்னார்.
“சில தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் வரிகளைச் சரியாகக் கட்டுவதில்லை. அப்படிப்பட்டவர்களைத்தான் குறி வைக்கிறோம்”, என்று கூறியவர், ஐஆர்பி நடவடிக்கையில் இறங்கும்போது பெரிய நிறுவனம் சிறிய நிறுவனம் என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை என்றார்.